நடிகையின் "பங்களாவில்" நுழைஞ்ச 2 பேர் யாரு? கடைசியில பார்த்தால் செம அப்செட்டாம்.. மிரண்ட மதுரவாயல்
சென்னை: பிரபல நடிகையின் பங்களாவில் நுழைந்த திருடர்கள் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை தந்துள்ளனர்.. என்ன நடந்தது சென்னை மதுரவாயலில்?
சின்னத்திரை டான்ஸ் நிகழ்ச்சியில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் லதா ராவ்.. பல சீரியல்களில் நடித்ததின்மூலம், தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் ராஜ்கமல்..
இவர்கள் இருவருமே சீனியர் நடிகர்கள்.. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.. 15 ஆண்டுகளுக்கு மேலாக, தம்பதியாக வலம்வந்து, சின்னத்திரையை கலக்குபவர்கள்..

மதுரவாயல்: சென்னை, மதுரவாயில் பகுதியில் பங்களா ஒன்றை வாங்கி, ஷூட்டிங்கிற்காக அதை பயன்படுத்தி வருகிறார்கள்.. சின்னத்திரையில் ஒளிபரப்பான நிறைய ஷூட்டிங்குகள், இந்த பங்களாவில்தான் எடுக்கப்பட்டது. இப்போதும், ஷூட்டிங் நடத்தப்பட்டும் வருகிறது.. சமீபத்தில், இந்த பங்களாவில் திருடு போனது.. பங்களாவின், பின்பக்க பூட்டை உடைத்து 65 இன்ச் காஸ்ட்லி டிவியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
அத்துடன், இந்த பங்களாவின் பக்கத்து வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும் திருடு போயிருந்தது.. திடீரென பங்களாவில் நுழைந்த ராஜ்கமல்-லதா ராவ் தம்பதியினர், டிவியை காணாமல் அதிர்ந்து போனார்கள்..
திருட்டு சம்பவம்: இதையடுத்து, உடனடியாக மதுரவாயில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசாரும் விசாரணை நடத்தி, இறுதியில் 2 பேரை கைது செய்தனர்.. கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த காஜா முகைதீன் மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த அமீனுதீன் ஆகிய 2 பேரும்தான், பங்களாவில் நுழைந்து திருடியது என்பது உறுதியானது.
அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட டிவி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

பாஜக பிரமுகர்: அந்த டிவியின் மதிப்பு ஒரு லட்ச ரூபாய் என்கிறார்கள்.. மோட்டார் பம்ப் ஒன்றையும் இவர்கள் திருடியிருக்கிறார்கள்.. இந்த பங்களாவில் திருடிவிட்டு, பக்கத்து வீட்டு காரை திருடியுள்ளனர்.. அந்த வீட்டுக்காரர் பாஜகவை சேர்ந்த பொன். பிரபாகர் என்ற முக்கிய பிரமுகர் ஆவார்.. கைதாகி சிறையில் உள்ள 2 திருடர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது அவர்கள் தந்த வாக்குமூலம் இதுதான்:
நடிகையின் பங்களா வீடு என்பதால் அதிக அளவில் பொருட்கள் இருக்கும் என நினைத்து திருட சென்றோம். ஆனால், வீட்டிற்குள்ளே நுழைந்ததுமே அப்செட் ஆகிவிட்டோம்.. வெறும் டிவி மட்டுமே இருந்தது.
பெரிய அளவிலான டிவியை திருடிக்கொண்டு வெளியே வந்துவிட்டோம். அதற்கு பிறகுதான் தெரிந்தது, அவ்ளோ பெரிய டிவியை எடுத்து செல்ல வாகனம் எதுவும் இல்லை.. அப்போதுதான் பக்கத்து வீட்டு வாசலில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் திருடி, அதில் ஏறி தப்பிச்சென்றோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications