ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான்.. மாணவர்கள் முன் சொன்ன நடிகை நமீதா.. தட்டிக்கொடுத்த தமிழிசை!
வேலூர்: இளைஞர்கள் தாய்மொழியை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள நடிகை நமீதா, ஆங்கிலம் தெரிந்தால் நல்லது தான் என்றும் தெரிவித்துள்ளார். தன் வீட்டில் குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் பேசுவதில்லை என்று கூறிய அவர், தாய்மொழியில் மட்டுமே பேசி வருவதாக கூறி இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலம் பேசுவோர் வெட்கி தலை குனியம் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் நமது கலாச்சாரத்திற்கு ஆபரணம் போன்றதாகும். ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழியில் நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடியாது.

அமித் ஷா கருத்து
அரைகுறையான வெளிநாட்டு மொழியால் நாம் ஒருபோதும் முழுமையான இந்தியா என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த பேச்சு நாடு முழுவதும் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஏழை குழந்தைகள், மாணவர்கள் ஆங்கிலம் கற்பனை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.
ராகுல் காந்தி பதிலடி
ஏழைகள் கேள்வி கேட்பதையோ அல்லது முன்னேறுவதையோ சரிசமமாக மாறுவதையோ அவர்கள் விரும்பவில்லை. ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல.. அதுவொரு அதிகாரம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆங்கிலம் தொடர்பாக அமித்ஷா பேசியது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். அவர் தாய்மொழியை ஆதரித்து இப்படியொரு கருத்தை பேசியதாக தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் பதிவு
தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ஆங்கிலத்தை உயர்குடியினருக்கானதாக சித்தரிக்க விரும்புகிறார்கள். ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எழுச்சி பெற ஆங்கிலம் அதிகாரம் அளிப்பதாலேயே இதை செய்கிறார்கள். ஆங்கிலம் காலனித்துவ நினைவுச்சினல்ல அல்ல. அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி என்று தெரிவித்தார்.
நமீதா பேச்சு
இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற யோகா செய்யும் நிகழ்ச்சியில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா கலந்து கொண்டார். அப்போது நடிகை நமீதா பேசுகையில், என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் தாய்மொழியில் மட்டும்தான் பேசுவேன்.
ஆங்கிலம் நல்லதுதான்
ஆனால் ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான். அதேபோல் தாய்மொழியின் கண்டிப்பாக தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு முடிவடைந்த பின், மாநில பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டு தெரிவித்தார். இந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications