"ரொம்ப அழகா இருக்கே.. ஆசையா இருக்கு.." பூரித்து போன பூர்ணா.. கூண்டோடு சிக்கிய 4 பேர் கும்பல்!
சென்னை: "நீ ரொம்ப அழகா இருக்கே.. கல்யாணம் செய்ய ஆசையா இருக்கு" என்பது முதல், இளைஞர் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் கேட்டு பூரித்து போனார் நடிகை பூர்ணா.. பிளாக்மெயில் வரை சென்று, கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆகி உள்ளார் பூர்ணா.. நடிகையை ஏமாற்ற முயன்ற 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழில் மிகப் பிரபலமான நடிகை பூர்ணா.. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு போதிய வாய்ப்புகள் வரவில்லை.. ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடும் நிலைமைக்கு வந்தார்.
தற்போது லாக்டவுன் சமயம் என்பதால் வீட்டிலேயே முடங்கியவர், டிக்டாக் பக்கம் தனது கவனத்தை செலுத்தி தொடங்கினார்.. ஷம்னா காசிம் என்பதுதான் இவரது டிக்டாக் அக்கவுண்ட் பெயர்.. அதில் ஏகப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு, குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்தையும் தன்னகத்தே வளைத்துள்ளார்.

நகை கடை
இந்த சமயத்தில்தான் பூர்ணாவுக்கு ஒருவர் பழக்கமாகி உள்ளார்.. இவர் டிக்டாக்கில் அறிமுகமானவர்.. அவர் பெயர் அன்வர்.. துபாயில் நகை கடை வைத்திருப்பதாக சொல்லி உள்ளார்.. கோழிக்கோட்டிலும் ஒரு நகை கடை இருக்கிறது என்று சொல்லியே பூர்ணாவை நம்ப வைத்துள்ளார்.. பூர்ணாவை கல்யாணம் செய்ய அளவு கடந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அன்வர்
இதை கேட்டு பூரித்த பூர்ணா, வீட்டில் வந்து முறைப்படி பெண் கேட்க சொல்லி உள்ளார்.. அதன்படியே அன்வர் கடந்த 3-ம் தேதி 6 பேரை அழைத்து கொண்டு பூர்ணா வீட்டுக்கு வந்து பெண் கேட்டார்.. ஆனால் அந்த 6 பேரை பார்த்ததும் பூர்ணாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.. அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று லேசாக புரிந்தது.. அவர்களின் பேச்சில் வித்தியாசம் தெரிந்தது.

சிசிடிவி காட்சி
எனினும் இதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், இன்னொரு நாள் கல்யாண பேச்சு பேசலாம் என்று அனுப்பி வைத்துவிட்டார்.. இதற்கு பிறகு பூர்ணா தன் வீட்டு சிசிடிவி காட்சியை பார்த்தபோது, வீட்டுக்கு வந்த அந்த 6 பேரும் பூர்ணா வீட்டின் வெளியே நின்றிருந்த கார், பங்களாவை செல்போனில் வீடியோ எடுத்ததை கவனித்தார்.,. அப்போதுதான் சந்தேகம் மேலும் வலுவானது.

மிரட்டல்
அந்த நபரின் டிக்டாக் அக்கவுண்டை பார்த்தால், அன்வர் என்ற பெயரும் போலி என தெரிந்தது.. அவர் உண்மையான பெயர் ரபீக் என்பதும் தெரியவந்தது. எல்லா வண்டவாளமும் பூர்ணாவுக்கு தெரிந்துவிட்டது என்று தெரிந்ததும், ரபீக் ஸ்டிரைட்டாக விஷயத்துக்கு வந்தார்.. "வரக்கூடிய சினிமா சான்ஸ் எதுவும் போய்விடாமல் இருக்க வேண்டுமானால், ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும்" என்று பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார்.

4 பேர் கைது
இதையடுத்துதான், நேரடியாக போலீசாருக்கு போனார் பூர்ணா.. அவரது அம்மா அளித்த புகாரின்பேரில், அந்த மோசடி கும்பலில் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.. ரபீக், ரமேஷ் கண்ணன், சிவதாசன், அஷ்ரப் என்பது அவர்களின் பெயர்கள்.. இவர்கள் எல்லாருமே திருச்சூரை சேர்ந்தவர்கள்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications