நடிகை பூர்ணாவை கல்யாணம் செஞ்சிக்கிறீங்களா?.. நடிகை பெயரில் நூதன திருமண மோசடி கும்பல் சிக்கியது
சென்னை: நடிகை பூர்ணா தன்னை திருமணம் செய்வதாக மோசடி செய்ததை அறிந்து அந்த மோசடி கும்பலை போலீஸில் பிடித்து கொடுத்தார்.
நடிகை பூர்ணா தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவருக்கு கடந்த 2, 3 ஆண்டுகளாக அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் எந்த வரனும் வராமல் இருந்தது. சில வரன்கள் எங்களுக்கு பிடிக்காமல் இருந்து வந்தது. பெண் பிள்ளையாயிற்றே, வயது அதிகமாகிறதே என அவரது தாய் கவலைப்பட்டதாக தெரிகிறது.

பூர்ணா
மேலும் சில வரன்கள் பூர்ணா நடிகையாக இருக்கிறார் என்பதற்காகவே தள்ளி போனது. இந்த நிலையில் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆசிஃப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்த நிலையில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி பூர்ணா மீண்டது பரபரப்பாகியுள்ளது.

தள்ளிபோனது
இந்த நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டியில் எனது திருமணம் தள்ளி போனதால் வேறு ஜாதியிலோ மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என பலர் கேட்டனர். இது எனது தாயாருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. எனக்கு வரன் பார்க்க தொடங்கியதிலிருந்து எதுவும் அமையவில்லை. தற்போது திருமணமாகியுள்ளது. எனது தாயார் மகிழ்ச்சியாக உள்ளார்.

திருமண மோசடி
ஒரு கும்பல் என்னை திருமணம் செய்வதாக மோசடி செய்ததை போலீஸில் வெளிப்படுத்தி பிடித்து கொடுத்தேன். வரன் தேடும் போது மோசடி கும்பலில் இருந்து பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்காகதான் அந்த கும்பலை போலீஸில் சிக்க வைத்தேன். ஆனாலும் இது போன்ற மோசடி கும்பலில் இருந்து பெண்கள் ஏமாந்து வருகிறார்கள். அவர்கள் என்னிடம் ஏமாந்த கதையை கூறிய போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றார்.

மேட்ரிமோனி
வரன் பார்க்கும் போது அங்கீகாரம் பெறாத மேட்ரிமோனிகளில் பெண்கள் தங்கள் புகைப்படங்களுடன் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறார், வீடியோ காலில் பார்த்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என யாராவது கூறினால் நம்பாதீர்கள். இதிலும் சில இடங்களில் மோசடி நடக்கிறது.

நகை, பணம்
இது போன்ற இடங்களில் சிக்குவதால்தான் நகை, பணத்தை பெற்றுக் கொண்டு மோசடிக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள். எனவே வரன் தேடும் போது அவசரம் காட்டாமல் இருக்க வேண்டும். வயது ஏறுகிறதே என அவசரம் காட்டினால் அந்த பெண் காலத்திற்கும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை வரும். எனவே பெற்றோர் வரன் தேடுவதில் அவசரம் காட்ட கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அதே வேளையில் ஆண்களையும் சில பெண்கள் ஏமாற்றி பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு அடுத்தடுத்து 6ஆவது திருமணம், 7ஆவது திருமணம் என்ற ரேஞ்சுக்கு செல்கிறார்கள். இவர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications