நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.. நீங்களும் போட்டுக்கோங்க.. ராதிகா சரத்குமார்!
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அனைவரும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ், இன்னும் ஒழியாமல் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல் வலுவாக இருந்து வருகிறது. மேலும் இது தீவிரமாக பரவி வருகிறது.

இதை தடுக்க ஒரே வழி தடுப்பூசி என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி இந்தியாவில் கோவாக்சின், கோவீஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த தடுப்பூசியை செயல்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டது.
தற்போது கோவின் என்ற செயலி மூலம் பதிவு பெற்றவர்கள் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. நேற்றைய தினம் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
#vaccine taken. Please protect yourself and loved ones go get vaccinated. Follow all safety norms 🙏🙏 pic.twitter.com/NdHMoGzaIk
— Radikaa Sarathkumar (@realradikaa) March 2, 2021
இதன் மூலம் தடுப்பூசி பாதுகாப்பானது என்ற ஒரு நம்பிக்கையை அவர் பொதுமக்களிடம் முன் வைத்தார். அது போல் நடிகை ராதிகா சரத்குமாரும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை இன்று போட்டுக் கொண்டார்.
இதுகுறித்து புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா கூறுகையில் நான் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உங்களையும் உங்களின் அன்பானவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள் என ராதிகா தெரிவித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications