அசிங்க அசிங்கமா மெசேஜ் பண்றாங்க.. லிஸ்டோடு வந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா! களமிறங்கிய மகளிர் ஆணையம்!
சென்னை: தனது ரசிகரான ரேணுகா சாமியை கொலை செய்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ஜாமினின் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்தது. இதை அடுத்து தனக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ரசிகர்களின் பெயர்களை வெளியிட்டு இருக்கிறார் ரம்யா. அவருக்கு ஆதரவாக கர்நாடக மாநில மகளிர் ஆணையமும் களமிறங்கியுள்ளது.
கன்னட திரை ரசிகர்களால் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் தர்ஷன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கன்னட திரையுலகில் நடிகையாக வலம் வரும் பவித்ரா கவுடாவுடன் முறை தவறிய பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் தொடர்ந்து பவித்ரா கவுடாவுக்கு மிரட்டல்கள் வந்தன. குறிப்பாக ரேணுகா சாமி என்பவர் பவித்ரா கவுடாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.

தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் நிலையில் குழந்தைகளை விட்டுவிட்டு பவித்ரா கவுடாவுடன் தர்ஷன் இருப்பதை விரும்பாத அவரது தீவிர ரசிகரான ரேணுகா சாமி, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். மேலும் ஆபாச புகைப்படங்களை, செய்திகளையும் அனுப்பி வந்துள்ளார் ரேணுகாசாமி. தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகா சாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்களைக் கண்டுபிடித்துள்ளார் தர்ஷன்.
இதை அடுத்து தனது ரசிகர் மன்ற தலைவரான ராகவேந்திரா மூலம் ரேணுகா சாமியை, சித்ரதுர்கா பகுதியில் இருந்து பெங்களூருக்கு வரவழைத்து இருக்கிறார் தர்ஷன். தொடர்ந்து அவரை தனியாக அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி இரும்பு கம்பியால் அடித்து உதைத்துள்ளனர். ரேணுகா சாமி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மறைக்கப்பட்டது. தொடர்ந்து ரேணுகா சாமியை காணவில்லை என்ற புகாரை தொடர்ந்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தர்ஷன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா ரேணுகா சாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக பதிவிட்டிருந்தார்.
இதனால் கோபமடைந்த தர்ஷனின் ரசிகர்கள் திவ்யா ஸ்பந்தனாவை சமூக வலைதளங்களில் வசை பாடி வருகின்றனர். மேலும் அவருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தனக்கு ஆபாச தகவல்கள் அனுப்பி மோசமாக வசைபாடுவதாகவும், இது போன்றவர்கள் தான் பெண்களை வன்கொடுமை செய்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய 11 பேரின் பெயர்களையும் பொது வெளியில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் திவ்யா ஸ்பந்தனாவின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஆன ஒரு நடிகைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ள, கர்நாடக மகளிர் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications