இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பான நாடாம்! டக்குன்னு வந்தாங்க பாருங்க ரஞ்சிதா.. என்னது கைலாசவா? ஷாக்
சென்னை: பிரபல சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனக்கென்று தனியாக ஓரு நாட்டை உருவாக்கிக்கொண்டு தனது சீடர்களுடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரின் முதன்மை சீடரான ரஞ்சிதா குறித்து சோஷியல் மீடியாக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா என்று ரஞ்சிதா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நித்யாநந்தா சிக்காத சர்ச்சைகளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சலசலப்பில் சிக்கியிருந்த நித்யாநத்தா சமீபத்தில் கைலாசா என புதியதாக ஒரு நாட்டை உருவாக்கி அதில் குடியேறிவிட்டதாக கூறி வருகிறார். தமிழக காவல்துறை அவரை வலைவீசி தேடி வருகிறது. இருப்பினும் அவர் சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறார். இப்படியாக கைலாசாவில் இருந்துக்கொண்டே தனது சத்சங்கத்தையும் நடத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், விரைவில் கைலாசா இந்துக்களின் புனித பூமியாக மாறும் என்று கூறியிருந்தார். இது தொடர்பான போட்டோக்களும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. போலீசின் தேடப்படும் பட்டியலில் நித்தி இருப்பது இந்த அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில் இந்த ஒப்பந்தங்களையெல்லாம் அவர்கள் ரத்து செய்துவிட்டனர். அதேபோல ஐநா கூட்டத்தில் நித்தியின் சிஷியை விஜய்ப்ரியா பேசிய பேச்சுக்களும் சர்ச்சையாகின.
காவல்துறையால் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியை பிரதிபலிக்கும் வகையில் விஜய்ப்ரியா பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவரின் கருத்துக்கள் நிராகரிப்பதாக ஐநா அதிகாரிகள் கூறினர். இப்படியாக ஆள் இருக்கும் இடம் தெரியாமலேயே சோஷியல் மீடியாக்கள் மூலம் தன்னை பற்றிய பேச்சுக்களை உருவாக்கி வரும் நித்தியானந்தா நிச்சயம் ஒரு நாள் சிக்குவார் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இப்படி இருக்கையில்தான் நித்தியின் முதன்மை சிஷியையான ரஞ்சிதாவும் தற்போது சோஷியல் மீடியாக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறார். அவரது லிங்க்டு இன் சமூக வலைத்தள பக்கத்தில் கைலாசாவின் பிரதமர் என்று மென்ஷன் செய்திருந்தார். இதான் இவர் குறித்த பேச்சுக்கள் அதிகம் எழ முக்கிய காரணமாக இருந்தது. இந்நியைில் தற்போது இவர் யூடியூபில் பக்தர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.
இப்படியாக பக்தர் ஒருவர்? 'பெண்களுக்கான பாதுகாப்பான இடம் எது?' என கேட்ட கேள்விக்கு 'கைலாசாதான் பாதுகாப்பான இடம்' என்று அவர் பதிலளித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "கைலாசம் பரமசிவம் பக்கம் நிற்கிறது. இந்துத்துவத்தின் புனிதத்தை ஒரு நெட்வொர்க்காக இணைக்கிறது கைலாசா. பூஜைகள், யோகா, சந்யாசம் உள்ளிட்ட அனைத்து இந்து நெறிமுகளையும் கைலாசா கற்றுத் தருகிறது. இது அசைக்க முடியாத அடித்தளத்தை கொண்டது.
கைலாசா எப்போதும் தர்மத்தின் பக்கம் நிற்கும், அதில் எந்த சமரசமும் செய்யாது. வேறு எந்த மிரட்டலுக்கும் கைலாசாவில் இடமில்லை. இந்த உலகம் இரு முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒன்று செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI டெக்னாலஜி , மற்றொன்று CI எனப்படும் காஸ்மிக் இன்டெலிஜென்ஸ், அது தான் கைலாசா. இந்த உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார். கைலாசா, முதல் இந்து தேசம். இன்று இந்துக்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள்.
அவர்கள் வசிக்கும் நாடுகளில் இந்துக்களுக்கான தேவைகள் கிடைப்பதில்லை. ஆனால், கைலாசாவில் வசிக்கும் இந்துக்களுக்கு முறையான தேவைகள் கிடைக்கிறது. நான் யார் என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், நீங்கள் வரவேண்டிய இடம் தான் கைலாசா. கைலாசாவில் எல்லாமே இலவசம். கல்வி இலவசமாக கிடைக்கிறது. சுவாமி நித்யானந்தர் அதில் உறுதியாக இருக்கிறார். விலங்குகளை கொலை செய்வதை அங்கு அனுமதிப்பதில்லை. அதனால் அசைவங்களுக்கு அனுமதியில்லை.
சுவாமிஜியின் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்க்கையில், தர்மத்தின் பக்கம் அவர் நின்றிருக்கிறார். தொடர்ந்து தர்மத்தின் பக்கம் அவர் நிற்பார். காசி, மதுரை மீனாட்சி போன்ற புனிதமான இந்துக்களின் வரலாற்றை, இந்துக்களின் நினைவில் கொண்டு சேர்ப்பதும், போற்றி பாதுகாப்பதும் தான் சுவாமி நித்யானந்தாவின் பணி. 2009ம் ஆண்டு சுவாமி நித்யானந்தரை சந்தித்தேன். அவர் பார்த்ததும் புன்னகைத்தார். அவர் அனைவரிடமும் பேசினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருந்தார்.
பணம், பொருள் சம்பாதிக்கும் எந்த எண்ணமும், நோக்கமும் அங்கு இல்லை. பெண்கள் முன்னேற்றத்தில் கைலாசா எப்போதும் முன்னுரிமை தருகிறது. உலக நாடுகளின் கலந்தாய்வுகளில் தன்னுடைய பிரதிநிதியாக பெண்களை தான் கைலாசா அனுப்புகிறது. மற்ற எந்த நாடுகளும் இதை செய்வதில்லை. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று நித்யானந்தர் அறிவித்தார். ஆனால் இன்று கைலாசாவின் பொறுப்புகளில் 98 சதவீதம் பெண்கள், தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை கைலாசாவில் இருப்பதாக அங்கு வசிக்கும் பெண்கள் கூறுகின்றனர்" என்று கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications