“நான் டிரெஸ் போடாம நடிச்சா உனக்கென்ன..” பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் பந்தாடிய இரவின் நிழல் நடிகை
சென்னை: இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனுடன் நடிகை ரேகா நாயர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ஆர்தர் வில்சன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள்.

சர்ச்சைகள்
சிங்கிள் ஷாட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து திரையுலகினர், ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கு இணையாக இந்த திரைப்படத்தால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன. உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று பார்த்திபன் இதற்கு விளம்பரம் செய்து வரும் நிலையில், அது தவறான தகவல் என்று விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

பிரிகிடா பேச்சால் சர்ச்சை
அதேபோல் இந்த படத்தில் நடித்த பிரிகிடா சேரி மக்கள் கெட்ட வார்த்தை பேசுவார்கள் என்று பேசியதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பிரிகிடாவுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை கைது செய்யவும் வலியுறுத்தினர். நடிகர் பார்த்திபன் இந்த விவகாரத்தில் தலையிட்டு மன்னிப்பு கோரியதால் அந்த பிரச்சனை ஓய்ந்தது.

அரை நிர்வாண காட்சி
மேலும் இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் அரை நிர்வாணமாக நடித்திருப்பதை பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர். குடும்பத்துடன் இதை பார்க்க முடியாது என்றும் பலர் தெரிவித்தனர். அதேநேரம் இது துணிச்சலான முயற்சி என்ற பாராட்டுக்களும் சேர்ந்தே வந்தன. இந்த நிலையில் நடிகை ரேகா நாயர் இதில் அரை நிர்வாணமாக நடித்திருப்பதை விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் வரம்பு மீறி விமர்சித்ததாக கூறப்படுகிறது.

பயில்வானுடன் வாக்குவாதம்
இதனால் ஆத்திரமடைந்த ரேகா நாயர் சென்னையில் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனை நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், உங்களுக்கு என்ன என்று கேட்ட அவர், பயில்வான் ரங்கநாதனை நோக்கி காட்டமான சில வார்த்தைகளை பயன்படுத்தி சாடினார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் எழுந்தது.

காவல்நிலையத்திலும் புகார்
இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. பயில்வான் ரங்கநாதன் யூடியூப் வீடியோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க, குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications