நள்ளிரவில் பகீர்! ஷகிலாவை தள்ளிவிட்டு கொடூர தாக்குதல்! வளர்ப்பு மகள் ஷீத்தல் மீது போலீசில் புகார்
சென்னை: பிரபல நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் மற்றும் உறவினர்கள் இணைந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1980, 90களில் மலையாள சினாமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் ஷகிலா.. கவர்ச்சி நடிகையான இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் டாப் ஹீரோ படங்களையே மிஞ்சும் வகையில் தியேட்டரில் ஓடும்.

இவர் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறது. சமீபத்தில் டிவி சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பிறகு, டியூடியூப் சேனல்களில் பிரபலங்களை நேர்காணல் எடுத்து வருகிறார்.
வளர்ப்பு மகள் ஷீத்தல்: இதற்கிடையே ஷகிலாவை அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் அடித்துத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதற்கட்ட விசாரணையை கோடம்பாக்கம் போலீசார் ஆரம்பித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளையும் விசாரணைக்குக் கைப்பற்றியுள்ளனர். ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல், ஷீத்தல் தாய், சகோதரி ஆகியோர் இணைந்து ஷகிலா மற்றும் அவரது வழக்கறிஞரைத் தாக்கியதாகப் புகார் தரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷகிலாவின் அண்ணன் மகளான ஷீத்தல் என்பவரை 6 மாத கைக்குழந்தையில் இருந்தே ஷகிலா தான் தனது வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார். இதற்கிடையே சனிக்கிழமை மாலை அவர்கள் வீட்டில் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது வளர்ப்பு மகளான ஷீத்தல் ஷகிலாவை தாக்கிவிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள தனது சொந்த தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்
தாக்குதல்: வளர்ப்பு மகள் தன்னை தாக்கிவிட்டதாக இந்தச் சம்பவம் குறித்து ஷகிலா தனது வழக்கறிஞர் சவுந்தர்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஷீத்தலிடம் வழக்கறிஞர் சவுந்தர்யா செல்போன் மூலம் பேசியுள்ளார். இரு தரப்பிற்கும் இடையே சமாதனமாக போகலாம் என்று கூறி வழக்கறிஞர் சவுந்தர்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இதையடுத்து ஷகிலா வீட்டிற்கு ஷீத்தல், அவரது தாயார், அவரது சகோதரி வந்துள்ளனர்.
விசித்ராவுக்கு பாலியல் சீண்டலா! நம்புற மாதிரியா இருக்கு? கேள்விகளை அடுக்கிய நடிகை ஷகிலா
அப்போது இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அங்கோ இருந்த டிரேவை எடுத்து ஷீத்தல் வழக்கறிஞர் சவுந்தர்யா மீது தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் சவுந்தர்யா, தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற அனுமதிக்கப்பட்டார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஷகிலாவுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புகார்: இது தொடர்பாக வழக்கறிஞர் சவுந்தர்யா கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை கோடம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். முதலில் அங்குள்ள சிசிடிவி அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications