அப்படியே மிரண்டு போயிட்டேன்.. நடிகை சோனா வீட்டுக்குள் கத்தியோடு புகுந்த கேங்! மேட்டர் இது தான்!?
சென்னை : சென்னை மதுரவாயலில் நடிகை சோனாவின் வீட்டுக்குள் இரண்டு பேர் கத்தியோடு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவர் ஏறிக் குதித்து வீட்டுக்குள் வந்த இருவரும் பெரிய கத்தியை எடுத்து மிரட்டியதால் தான் மிரண்டு போனதாக சோனா பேசிய வீடியோ வேகமாக பரவிய நிலையில், இருவரை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் காமெடி குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை சோனா. 2022ல் மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றவர். ஆரம்பத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து செகண்ட் ஹீரோயின் அளவுக்கு உயர்ந்தாலும் கவர்ச்சி நடிகை என்பதே அவரது அடையாளமாகி போனது. தமிழில் குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக கவர்ச்சி காட்டி பிரபலமானார்.
தொடர்ந்து ஜித்தன் 2, குரு என் ஆளு, அழகர் மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில சின்னத்திரை சீரியல்களில் கன்னட மொழியிலும் தலைகாட்டி இருக்கிறார். காமெடி கேரக்டர்களில் கூட கவர்ச்சியை வாரி வழங்கிய அவர் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழகத்தில் மீ டூ தொடர்பான புகார் வந்த போது மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனான பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்பிபி சரண் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
சரணா இப்படி என பரபரப்பு கிளம்பிய நிலையில் அதற்கு பிறகு அந்த விவகாரம் அதோடு முடிந்து போனது. தொடர்ந்து சினிமாவில் இருந்து சற்றே விலகி இருந்த சோனா தற்போது மீண்டும் ஊடக வெளிச்சத்திற்குள் வந்திருக்கிறார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருவதாக கூறப்படும் நிலையில் சென்னை மதுரவாயலில் கிருஷ்ணா நகர் பகுதியில் சோனா வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சோனாவின் வீட்டில் திடீரென கத்தியோடு இரு நபர்கள் புகுந்ததாகவும், வீட்டில் இருந்த சில பொருட்களை அவர்கள் திருட முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. சோனா படப்பிடிப்புக்காக செல்லும் நேரத்தில் வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட இரண்டு பேர் சுவரை ஏறி குறித்து கத்தியோடு உள்ளே புகுந்து ஏசி யூனிட்டை திருட முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது நாய் குறைத்ததால் சோனா வந்து பார்த்தபோது அவரை முறைத்தவாறு கத்தியை காட்டி மிரட்டி இருக்கின்றனர். தொடர்ந்து சோனா கூச்சல் போடவே இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பினர். கதவைத் திறந்து தான் வந்ததும் திருடர்கள் பயந்து போய் விடுவார்கள் என தான் நினைத்ததாகவும் ஆனால் பெரிய கத்தியை காட்டி தன்னை மிரட்டியதாக சோனா பேசியிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக மதுரவாயில் போலீசார் சோனா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் நடிகை சோனாவின் வீட்டில் திருட முயற்சித்த, அவர்கள் சென்னையைச் லோகேஷ், சிவா என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் திருட்டு நோக்கத்திற்காக தான் உள்ளே வந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications