'சித்தப்பா' கமல்.. அக்கறையோடு வாக்கு சேகரித்த சுஹாசினி.. ஒரு இடம் விடல..
சென்னை: கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகை சுஹாசினி மணிரத்னம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
2019 மக்களவை தேர்தலை சந்தித்து இருந்தாலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதன் முதலில் சந்திக்கும் சட்டசபைத் தேர்தல் இது. ஆகையால், தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கமலுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, நகர்ப்புறங்களில் மட்டும் வாக்கு வங்கி உள்ளது என்ற பெயரையும் வழித்து துடைத்து எடுக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு உள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். எனினும், சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கமல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஒன்றிலிருந்து மூன்று இடங்கள் வரை மட்டுமே மக்கள் நீதி மய்யம் வெற்றிப் பெறும் என்ற ரீதியில் தான் கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்ளன.
இருந்தாலும், எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத கமல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகளும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் தனது சித்தப்பா கமல்ஹாசனுக்காக மதுரை தெற்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

தொகுதியின் முக்கியமான அனைத்து இடங்களிலும் வலம் வந்த சுஹாசினி, மக்களை சந்தித்து கமல்ஹாசனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். காய்கறி மார்க்கெட், சந்தை, வீடுகள் என்று ஒரு இடம் விடாமல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு கோரினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications