Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை விஜயகுமாரி கிட்ட போன "தோட்டத்து சீர்".. தம்பி மனைவி விஜி - உருகிய பிரபலம் - மகிழ்ந்த எஸ்எஸ்ஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்றைய காலகட்டத்தில், ஜெமினி கணேசன் - சாவித்திரி ஜோடிக்கு இணையாக பேசப்பட்டவர்கள் லட்சிய நடிகர் எஸ்எஸ். ராஜேந்திரனும், விஜயகுமாரியும்.. 60 படங்களுக்குமேல் நடித்துள்ளார்கள்!!
இரு மூத்த கலைஞர்களின் நினைவுகளை இன்றுவரை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.. இவர்கள் நடித்த படங்களை பற்றியும் புளகாங்கிதம் அடைந்து பேசிவருகிறார்கள். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும்கூட, சில தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் மின்னி மறையவே செய்கின்றன.

Actress Vijayakumari Fantastic character and do you know about excellent actor SS Rajendran

கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் ஆனவர் என்று தெரிந்தும்கூட, எஸ்எஸ்ஆரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜயகுமாரி.. தேனாம்பேட்டை வீட்டிலேயே முதல் மாடியில் பங்கஜம், இரண்டாவது மாடியில் விஜயகுமாரியும் வசித்து வந்திருக்கிறார்கள்.. 2 குடும்பமும் மிகவும் ஒற்றுமையாகவே இருந்திருக்கின்றன..

கால்ஷீட்கள்: காலசூழ்நிலை தம்பதியை பிரித்துவிட்டது என்றாலும், கணவர் மீதான விஜயகுமாரிக்கு இருந்த பாசம் அளவில்லாதது என்கிறார்கள் இவரை நன்கு அறிந்தவர்கள்.. கணவர் மேல் அபரிமிதமான அன்பு வைத்திருப்பாராம் விஜயகுமாரி.. அவர் சாப்பிடாமல் இவர் முதலில் சாப்பிடவே மாட்டாராம்.. கணவரை கேட்காமல் எதையும் செய்யவும் மாட்டாராம்.. இவருடைய பட கால்ஷீட்டுக்கள் அனைத்தையும் அப்போது, எஸ்எஸ்ஆர் தான் கவனித்து வந்திருக்கிறார்..

விஜயகுமாரிக்கு கதை பிடித்திருந்தாலும்கூட, அதை கணவர் வேண்டாம் என்றால், அது எவ்வளவு பெரிய பேனராக இருந்தாலும் சரி, விஜயகுமாரியும் நடிக்க மறுத்து விடுவாராம்.. இதுபோல், இவர் நடிக்க வேண்டிய எத்தனையோ படங்கள் கையைவிட்டு போயிருக்கின்றன.. கணவர் மனம் கோணாதபடிதான் வாழ்ந்துள்ளார். ஒரு சாதகப்பறவையாகத்தான் வாழ்க்கையை நடத்தினாராம்.

அறிஞர் அண்ணா: 1962 ல் எஸ்எஸ்ஆர், ஆண்டிப்பட்டியில் எம்எல்ஏவாக போட்டியிட்டபோது, கணவருக்காக விஜயகுமாரியும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது அறிஞர் அண்ணாவும் எஸ்எஸ்ஆரும் சிறையில் இருந்தபோது, அவர்கள் வெளியே வரும் வரை தினமும் அண்ணாவுக்கு மூக்குப்பொடியும், இருவருக்கும் படிப்பதற்காக தினசரி பேப்பர், மாத்திரைகளை வாங்கிச்சென்று பார்த்து வருவாராம்.

அன்பு பாசம்: பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி என அனைத்து தலைவர்களுடன் நெருக்கத்தை இந்த தம்பதியினர் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்..வீட்டு நிகழ்வில் அனைவரும் ஒரே குடும்பமாகவும் சேர்ந்து அன்பை பகிர்ந்து வந்திருக்கிறார்கள்..

இதில் எம்ஜிஆர் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.. ஜானகியம்மாள் மீது விஜயகுமாரிக்கு தனிப்பிரியம்.. எம்ஜிஆர் வீட்டு கிச்சன்வரை செல்லும் உரிமை பெற்றவராம் விஜயகுமாரி..

தங்கை விஜி: இவரை தன்னுடைய சொந்த தங்கையாக எம்ஜிஆர் நடத்திவந்தார். இதன்காரணமாகவே, இவருடன் மட்டும், சினிமாவில் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை.. "விஜி என்தம்பி மனைவி..தங்கை இணையாக ஒருபோதும் நடிக்கமாட்டேன் என்று சொன்னவர் எம்ஜிஆர்.. சொன்னதுடன் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு வருட பொங்கலுக்கும், தாய்வீட்டு சீதனமாக சீர் தருவாராம் எம்ஜிஆர்..

கணவன், மனைவி இருவருமே தமிழை தெளிவாகவும், சிறப்பாகவும், அழகாகவும் உச்சரிக்கக்கூடியவர்கள். அதனால்தான், இருவரையும் பூம்புகாரில் கலைஞர் கருணாநிதி நடிக்க வைத்தார்.

கலைஞர்: ஒருகட்டத்தில் இவர்கள் தம்பதிக்குள் தகராறு வந்தபோதுகூட, கணவரை பற்றின புகார்களை, தன் சகோதரர்களாக கருதிய அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகிய தலைவர்களிடம் எடுத்துச் சென்றாராம் விஜயகுமாரி.. ஆனால், பஞ்சாயத்துக்கள் பலனளிக்கவில்லை என்றாலும், ஏனோ அவர்களால் கூட இந்த தம்பதிகளை இணைக்க முடியவில்லை என்கிறார்கள் மூத்த கலைஞர்கள்.

"வாழ்க்கை பிரச்சினைக்காக நடிப்பதை நிறுத்தாதே" என்று மாமியார் அதாவது எஸ்எஸ்ஆர் அம்மாவும் விஜயகுமாரிக்கு அப்போது அட்வைஸ் செய்தாராம்.. 46 வருடங்களுக்கு பிறகு, எஸ்எஸ்ஆர் மரணத்தின்போது, மகனுடன் வந்து கதறி அழுதார் விஜயகுமாரி. எஸ்எஸ்ஆருடைய பிள்ளைகளையெல்லாம் பார்த்து அழுதார்.. அவர்களும் ஆறுதல் சொன்னதை, மீடியாக்கள் மூலம் நேரடியாகவே மக்கள் கண்டனர்.
விஜயகுமாரி கிட்ட போன "

பூம்புகார்: கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருந்தாலும், கலைஞர்களை பற்றி எத்தனையோ உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணையத்தில் வட்டமடித்தாலும், அவர்களது கலைத்திறமைகள் மட்டும் என்றுமே மாறுவதில்லை.

விஜயகுமாரி நடித்த "பூம்புகார்" படம் இன்றுவரை அப்படித்தான் காலத்தை கடந்தும் நிற்கிறது.. பூம்புகாரில் ஆன் தி ஸ்பாட்டிலேயே சத்தமாக கத்தி வசனம் பேசி தொண்டையிலிருந்து ரத்தமே வந்துவிட்டதாம்.. இந்த படத்தில் விரதம் இருந்தும் நடித்திருக்கிறார் விஜயகுமாரி.. அந்தவகையில், இன்னும் பல வருடங்கள் கழிந்தாலும், "பூம்புகார்" திரைவானில் என்றுமே ஜொலித்து நிற்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+