'விஜயலட்சுமி- சீமான்' விவகாரம்..ஒன்னுவிடாம சொல்லுவாரோ மதுரை செல்வம்? நாளை போலீஸ் விசாரணைக்கு சம்மன்!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை செல்வம் என்பவர் விசாரணைக்கு ஆஜராக சென்னை போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2008-ல் சீமான் தம்மை திருமணம் செய்து 3 ஆண்டுகளில் ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் 2011-ம் ஆண்டு புகார். இப்புகாரை அப்போது வாபஸ் பெற்றுக் கொண்டு பெங்களூர் சென்றார் நடிகை விஜயலட்சுமி.

விஜயலட்சுமி மீண்டும் புகார்: இதன் பின்னர் திடீரென கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் சென்னைக்கு வந்த விஜயலட்சுமி மீண்டும் சென்னை போலிசீல் சீமான் மீது புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார். அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு, தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி ஆதரவு தெரிவித்து அடைக்கலம் கொடுதார்.
மீண்டும் வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி: ஆனால் தம் மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்தார் சீமான். நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோரை மிக கடுமையாக விமர்சித்தார் சீமான். இதனிடையே திடீரென மீண்டும் சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். மேலும் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார் சீமான். அப்போது, விஜயலட்சுமி- வீரலட்சுமி இருவரையும் கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார் சீமான். நடிகை விஜயலட்சுமி, பலரையும் மிரட்டி பணம் பறிப்பவர் என்றும் சில ஆதாரங்களையும் சீமான் வெளியிட்டிருந்தார். வீரலட்சுமி தம்மிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மான நஷ்ட வழக்கும் தொடர்ந்தார் சீமான். இதற்கு எதிராக வீரலட்சுமியும் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

தற்கொலை செய்வதாக மிரட்டல்: சீமானின் பேட்டியால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி, நானும் என் சகோதரியும் தற்கொலை செய்யப் போகிறோம். இனியாவது சீமானை கைது செய்து சிறையில் அடையுங்கள் என வீடியோ வெளியிட்டார். அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்திலும் விஜயலட்சுமி- சீமான் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் விஜயலட்சுமி ஆஜராகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை செல்வத்துக்கு சம்மன்: இதனிடையே சீமானுக்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி பணம் கொடுத்து உதவியதாக சொல்லப்படும் மதுரை செல்வம் என்பவரை சென்னை வளசரவாக்கம் போலீசார் விசாரணைக்கு நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான சம்மன் கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications