கயல்விழிக்கு தெரியாமல் சீமான் அட்டகாசம்- திரிஷா பஞ்சாயத்தை முன்வைத்து திரி கொளுத்தும் விஜயலட்சுமி!
சென்னை: மனைவி கயல்விழிக்கு தெரியாமல் ஒரு கணவராக என்னிடம் சீமான் பேசினார்; இப்போது திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்காக வருத்தம் தெரிவிக்கிறா சீமான்... எனக்கு அவர் செய்த அநியாயத்துக்கு யார் வருத்தம் தெரிவிப்பது என நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது:

கணவர்தானே.. : இந்த வருஷம் மார்ச்சில் மதுரை செல்வம் என்பவரை வைத்து பேச்சுவார்த்தைக்கு வந்தார்.. அப்போது நான் தான் உன் கணவர்; உனக்கு எதாவது பிரச்சனைன்னா என்கிட்டதான கேட்கனும்; நான் இனிமேல் உனக்கு மாதம் ரூ50,000 கொடுக்கிறேன்.. எனக்கு எதிராக எந்த விஷயமும் பேசாத.. நீ பேசிகிட்டு இருக்கிற விஷயம் எல்லாம் திமுககாரங்க பார்க்கும் போது எனக்கு அவமானமா இருக்குன்னு பேச்சுவார்த்தைக்கு வந்தார்.
கயல்விழிக்கு தெரியாமல் அட்டகாசம்: அதற்கேற்ப தினமும் என்கிட்ட தினமும் கணவன் மனைவியாக பேசி வீடியோஸ் வாங்கிட்டு.. கயல்விழிக்கு தெரியாமல் இந்த அட்டகாசம் பண்ணிகிட்டு இருந்தார். இது எத்தனை நாள் நீடிக்கப் போகுது? நான் எதுக்கு பெங்களூரில் இருக்கனும்? நான் என்னைக்கு வந்து என் தமிழ் மக்களுடன் வாழப் போறேன்?ன்னு கேட்டேன். மதுரை செல்வம், உனக்குதான் ரூ1 கோடி கொடுத்திருக்கிறான் என பொய்யான விஷயத்தை சொல்லி மிரட்டுனாரு.
திரிஷா விவகாரம்: அதுக்கு பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்ட எங்க அக்காவை சென்னைக்கு கூட்டிட்டு வந்து புகார் கொடுத்தோம். ஆனால் மதுரை செல்வத்தை தேடுறோம் என போலீஸ் சொன்னது. இன்னைக்கு திரிஷா விஷயத்தில் எவ்வளவு சீக்கிரம் ஆக்ஷன் எடுக்கப்பட்டது? ஆனால் சீமான் விஷயத்தில் எனக்கு எவ்வளவு அநியாயம் நடந்துகிட்டு இருக்கு என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.
மன்சூர் அலிகானுக்காக சீமான் வருத்தம்: இன்றைக்கு திரிஷாவின் மனது வேதனைப்பட்டா மன்சூர் அலிகானுக்காக சீமான் வருத்தம் தெரிவிப்பாராம். அப்ப சீமான் எனக்கு 12 வருஷமா செய்த அநியாயத்துக்கு யார் வருத்தம் தெரிவிப்பாங்களாம்? நடிச்சுகிட்டே இருங்கப்பா.. யாரும் எதிர்பார்க்காத மாதிரி சீமானுடன் வீடியோஸ் எல்லாத்தையும் டெலிகாஸ்ட் பண்ணிட்டு சீமானின் உண்மையான முகத்தை உலகத்துக்கு காட்டி எப்படி புரட்சி செய்தேனோ அதேபோல இன்னொரு புரட்சி தமிழ்நாட்டில் பாக்கி இருக்கு. யாரும் எதிர்பார்க்காத மாதிரி என் உயிரை கொடுத்துட்டு அதுக்கு முன்னாடி 12 வருஷமா சீமான் எப்படி என் வாழ்க்கையை நாசம் செய்தார்? என்னை தமிழ்நாட்டுக்குள் வாழ விடாமல் எப்படி செய்தார்? எனக்கு நியாயம் கிடைக்காமல் என்ன செய்தார்? யாரெல்லாம் துணை போனார்கள்? என்பதை நீங்களே பார்த்தீங்க.. இனியும் வாழ முடியாது.. அவங்களை தமிழ்நாட்டு மக்களிடம் ஒப்படைத்துவிட்டு அப்புறம் இருக்கு.. நான் செத்ததுக்கு அப்புறம் மக்கள் உங்களை எல்லாம்.... தாக்குவாங்க பாருங்க. அன்னைக்குதான் அடங்குவீங்க.. அதை உறுதியா ஒருநாள் செய்து காட்டுவேன். இவ்வாறு விஜயலட்சுமி கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமியின் இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்கனவே விஜயலட்சுமி, சீமான் மீது புகார் கொடுத்து வாபஸ் வாங்கினார். இந்த புகார் குறித்த விசாரணை போலீஸ் நிலுவையில் உள்ளது. சீமான் தரப்பும் பலமுறை மறுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications