சீமான்! சொட்டு தண்ணீர் குடிக்காம சாகும் வரை உண்ணாவிரதம்.. இறங்கிட்டா அவ்ளோதான்.. நடிகை விஜயலட்சுமி!
சென்னை: திருமண மோசடி புகாரில் தமக்கு நியாயம் கிடைக்காமல் போனால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவேன்; அப்படி இறங்கிவிட்டால் எப்படி அடம் பிடிப்பேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியும் என நடிகை விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி பேசியதாக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் விஜயலட்சுமி கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சிக்கு நீங்க பெரிய தலைவராக இருக்கலாம்.. ஆனால் எனக்கு நீங்க எதுவுமே இல்லை. கணவன், மனைவியாக நாம் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்களை திருத்தக் கூடிய உரிமை எனக்கு உண்டு.

கடந்த மார்ச் மாதம் நீங்கள் சொன்னபடியே புகார் கொடுக்காமல் திரும்பிப் போனேன். இன்றைக்கு மீண்டும் யாரால் புகார் கொடுக்க வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியாதா? மாதம் ரூ50,000 பணம், புகார் கொடுக்காமல் அமைதியாக பெங்களூருக்கு போக வேண்டும், லோக்சபா தேர்தல் முடியும் வரை தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என நிபந்தனை விதித்தது நீங்கதானே.
சீமான் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்க கட்சிக்காரர்களை வைத்து என்னை கொச்சைப்படுத்திக் கொண்டே இருக்கலாம் என நினைக்க வேண்டாம்.
நான் ஏதாவது சாகும் வரை உண்ணாவிரதம்னு போராட்டத்தில் இறங்குனா.. நான் எப்படி அடம் பிடிப்பேன்னு உங்களுக்கு நல்லா தெரியும் சீமான். தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். ஏற்கனவே உங்க மேல பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகள் கூட போட்டிருக்கிறார்கள்.
ஆகையால் நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள். உங்கள் தம்பிகளின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் உங்கள் தலைமேல் மண்ணைத்தான் அள்ளிப் போடுவார்கள். ஒரு பெண்ணை ஒரு அளவுக்குதான் சித்திரவதை செய்யனும். ஆனால் நீங்கள் மிகவும் அதிகமாக சித்திரவதை செய்துவிட்டீர்கள். இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
முன்னதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமானை விசாரணைக்கு அழைத்தது சென்னை போலீஸ். ஆனால் சென்னை போலீஸ் முன்பாக 2 முறை விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை.
மேலும் நடிகை விஜயலட்சுமி ஏற்கனவே 7 பேருடன் வாழ்ந்தவர்; ஆனால் சீமான் பரிதாப்பட்டுதான் அவருக்கு பணம் கொடுத்தார். நடிகை விஜயலட்சுமி உயிருக்கு ஆபத்து உள்ளது என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கூறியிருந்தார். இந்த பின்னணியில் இன்று விஜயலட்சுமியின் புதிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications