பத்திரப்பதிவு அலுவலகங்களில் செப்.,16ல் கூடுதல் டோக்கன்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா? தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை மறுநாள் ஆவணி மாத கடைசி முகூர்த்த தினமாகும். இதனால் தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு வழக்கத்தை விட கூடுதலாக டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. எந்தெந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் எவ்வளவு டோக்கன்கள் கூடுதலாக வழங்கப்பட உள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு விட்டது. இதற்கு தமிழக அரசின் பதிவுத்துறையும் விதிவிலக்கல்ல. தமிழக பதிவுத் துறை கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் எளிமையாக பத்திரப்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tamil nadu sub registrar office token

மேலும் பொதுமக்கள் தாங்கள் விரும்பும்நாளில், விரும்பும் நேரத்தில் பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டோக்கன் என்பது ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் மாறுபடும்.

ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் தினமும் 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப்பதிவு என்பது நடக்கும். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நல்ல நாளில் சொத்துகள் வாங்கும்போது செல்வம் பெருகும். சொத்துகள் குவியும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இதனால் சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் சார்பில் பதிவுத்துறைக்கு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு சுபமுகூர்த்த தினகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன. மேலும் சுபமுகூர்த்த தினங்களில் அரசு விடுமுறை வந்தாலும் கூட அலுவலகத்தை செயல்பட வைக்கும் நிகழ்வுகளும் தமிழகத்தில் நடந்துள்ளது.

இந்நிலையில் தான் ஆவணி மாத 31ம் தேதி நாளை மறுநாள் வருகிறது. இது ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமாகும். இந்த நாளில் அதிகமான மக்கள் பத்திரப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் வழக்கத்தை விட கூடுதல் டோக்கன்கள் வழங்க தமிழக பதிவுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. அதன்படி நாளை மறுநாள் முகூர்த்த தினத்தையொட்டி பதிவுத்துறையின் சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களின் நலன்கருதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் வழக்கமாக வழங்கும் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+