'பாண்ட், டைகர், பாண்டியன்..' இவங்கள தான் தமிழ்நாடு NIB இனி முழுசா நம்பி இருக்கு.. ஏடிஜிபி ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு புதிய வரவாக 3 நாய்க்குட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பான படத்தை வெளியிட்டு ஏடிஜிபி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பல நூறு ஆண்டுகளாகவே மனிதனின் உற்ற தோழனாக இருப்பது என்றால் அது நாய்கள் தான். போலீசாருக்கு உதவுவது, பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவுவது என மனிதர்களின் வாழ்க்கைக்கு நாய்கள் அளிக்கும் சேவை மிக முக்கியமானது

மனிதனின் மோப்ப சக்தியை விட நாய்க்குப் பல மடங்கு அதிக மோப்ப சக்தியைக் கொண்டது. இதை பல்வேறு வகைகளில் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

புற்றுநோய்கள்

புற்றுநோய்கள்

பொதுவாகப் போதைப் பொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மோப்ப நாய்களின் பங்கு பிரதானமானது. நாய்களின் மோப்ப சக்தியால் போதைப்பொருள் என்றில்லை, வெடிகுண்டுகள், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனப் பல சூழ்நிலைகளிலும் நாய்கள் நமக்குப் பெரிய அளவில் உதவுகிறது. இது மட்டுமின்றி தோல் புற்றுநோய், மார்பக புற்றுநோய்களையும் கண்டறியும் ஆற்றலும் நாய்களுக்கு உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சமீபத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியவும் கூட நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. சில நாடுகளில் பரிசோதனை முயற்சியாக வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா உள்ளதா என்பதைக் கண்டறிய விமான நிலையங்களில் நாய்களைக் கூட பயன்படுத்தின. இப்படி உலகெங்கும் பல்வேறு விஷயங்களிலும் மனிதர்கள் நாய்களைப் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

முதல் சாய்ஸ்

முதல் சாய்ஸ்

குறிப்பாகப் போதைப் பொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மோப்ப நாய்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாய்களின் துல்லியமான மோப்ப சக்தியால் மிகக் குறைவான அளவு போதைப் பொருளை ஒருவர் வைத்திருந்தாலும் கூட அதை மிக எளிதாக நாய்களால் படு வேகமாகக் கண்டுபிடிக்க முடியும். இதனால் உலகெங்கும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் முதல் சாய்ஸாக நாய்கள் தான் இருக்கும்.

மோப்ப நாய்கள்

மோப்ப நாய்கள்

மோப்ப நாய்களில் சாதாரணமாகக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் நாய்கள், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நாய்கள், போதைப் பொருட்களை கண்டுபிடிக்கும் நாய்கள் என போலீசார் பயன்படுத்தும் அனைத்து வகையான நாய்களையும் சிறு வயது முதலே நாம் தயார் செய்யப்படும். மோப்ப நாய்களுக்கும் போலீஸ் போல் பதவி உயர்வு, பென்ஷன் உள்ளிட்ட அனைத்தும் சலுகைகளும் உண்டு. அவைகள் உயிரிழந்தால் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.

புதிய நாய்க்குட்டிகள்

புதிய நாய்க்குட்டிகள்

அப்படி இப்போது போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு புதிய வரவாக 3 நாய்க்குட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நாய்க்குட்டிகளுக்கு பாண்ட், டைகர், பாண்டியன் பெயரிடப்பட்டுள்ளது. இந்த 3 நாய் குட்டிகளின் படங்களைப் பகிர்ந்துள்ள ஏடிஜிபி மகேஷ் அகர்வால், முறையான பயிற்சிக்குப் பிறகு, போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் பணிகளில் இவை பயன்படுத்தப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+