Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் நியூஸ்.. மாணவர்களின் ஊக்கத்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அரசாணை

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், 2013 - 2014ம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதை, சமீபத்தில் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இது பலராலும் அப்போது பெரிதும் வரவேற்கப்பட்டது

பட்டப்படிப்பு

பட்டப்படிப்பு


அதன்படி, முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1,200லிருந்து 1,600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத் தொகையினை, 50 ஆயிரம் ரூபாயில் 1 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 உச்சவரம்பு

உச்சவரம்பு

இந்நிலையில், முழுநேர முனைவர் பட்டத்திற்கான ஊக்க தொகை திட்டத்தில், பட்டியலின மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 8 லட்சமாக உயர்த்தியும், ஒரு மாணவருக்கு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

 பட்டப்படிப்பு

பட்டப்படிப்பு

"முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.8.00 இலட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1200-லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகையினை ரூ.50,000-லிருந்து ரூ.1.00 இலட்சமாக உயர்த்தியும் அரசாணை (நிலை) எண்.96, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-3)துறை, நாள் 25.11.2021-இல் ஆணை வெளியிடப்பட்டது.

பயனாளிகள்

பயனாளிகள்

இத்திட்டதிற்க்கென, 2021-2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-2021 ஆம் ஆண்டு முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தில் 1124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+