வேற லெவல்.. விண்வெளியில் ‛மாஸ்’ காட்டும் ஆதித்யா எல்-1 விண்கலம்! இஸ்ரோ சொன்ன சூப்பர் அப்டேட்.. செம
சென்னை: பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவை கடந்து விண்வெளியில் உள்ள எல்-1 லாக்ரேஞ்ச் புள்ளியில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் பயணித்து வரும் நிலையில் இன்று இஸ்ரோ முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த மாதம் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1-ல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு அதில் உள்ள 7 கருவிகள் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தான் சூரியனை நோக்கிய ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டபாதைகள் படிப்படியாக உயரத்தப்பட்டன.
இந்நிலையில் தான் கடந்த 30ம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. பூமியின் ஈர்ப்பு விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்கான லாக்ரேஞ்ச் எல்1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது.
இந்நிலையில் தான் ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த முக்கிய அப்டேட்டை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஆதித்யா எல்-1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும், லாக்ரேஞ்ச் எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பாதை மாற்றும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஆதித்யா-எல்1 திட்டத்தின் விண்கலம் திட்டமிட்டப்படி செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலம் சூரியன் மற்றும் பூமிக்கு இடையேயான எல்1 புள்ளியை நோக்கி சென்று வருகிறது. அதாவது டிசிஎம் எனும் விண்கலத்தின் பாதை மாற்று பணி 16 வினாடிகளில் நேற்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19ம் தேதி டிரான்ஸ்-லாக்ரேஞ்சன் பாயிண்ட் 1 இன்செர்ஷன் நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து விண்கலத்தின் பாதையை சரிசெய்ய இந்த செயல்பாடு தேவையானனதாக இருந்தது. தற்போதைய நிகழ்வை தொடர்ந்து ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள காந்தபுல ஆய்வுக்கருவி சில நாட்களில் பணியை தொடங்கும். இந்த கருவி என்பது சூரியனில் இருந்து வெளிவரும் துகள்களின் காந்த தன்மை குறித்த ஆய்வை மேற்கொள்ளும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications