சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லையில் பாஜகவுக்கு ஆளே இல்ல.. நாங்கதான் நயினார் நாகேந்திரனை ஜெயிக்க வச்சோம்.. அதிமுக விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால்தான் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது என நெல்லையில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் என்று தெரிவித்தார்.

Recommended Video

    நெல்லையில் பாஜகவுக்கு ஆளே இல்ல.. நாங்கதான் நயினார் நாகேந்திரனை ஜெயிக்க வச்சோம்.. அதிமுக விமர்சனம்

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது தமிழகத்தில் பாஜக கட்சிக்கு தொண்டர்களே இல்லை.

    குறிப்பாக தென்காசி, கன்னியாகுமாரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதியில் மட்டும் சில தொண்டர்கள் உள்ளனர். ஆனால் நெல்லை சட்டமன்ற தேர்தலில் அதிமுக தொண்டர்கள் உழைத்ததால்தான் நயினார் நாகேந்திரன் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

    4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம்

    ஆண்மை

    ஆண்மை

    ஆனால் இப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை உள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளார். சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் வாய் திறக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுபோன்ற நயினார் நாகேந்திரன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார்.

    அமைச்சர் பதவி

    அமைச்சர் பதவி

    எங்கள் தயவால் எங்கள் ஆதரவால் தாமரை சின்னத்தை நாங்கள் தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்தோம். ஆனால் எங்களைப் பற்றிய நயினார் நாகேந்திரன் இப்படி பேசி வருகிறார். 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நயினார் நாகேந்திரன், அப்போது தொழில்துறை, மின்சாரத்துறை, ஊரக தொழில்துறை உள்ளிட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    நயினார் நாகேந்திரன்

    நயினார் நாகேந்திரன்

    ஆனால் இப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை இருக்கிறதா என கேட்கக் கூடிய கேள்விக்கு நாங்கள் ஒரே பதிலை சொல்கிறோம். நயினார் நாகேந்திரன் வேண்டுமானால் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் இதே தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். அப்போது நாங்கள் அவருக்கு ஆண்மை இருக்கிறது என சொல்வோம்.

    படுதோல்வி

    படுதோல்வி

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்ததால் தான் இவ்வளவு பெரிய படுதோல்வி அடைந்து உள்ளோம். இதற்கு காரணமே பாஜக கட்சி தான். சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுக்கு ஆதரவாக பேசி வருவது அவர்களது சுயநலம் ஆகும். அவர்கள் சிறைக்கு செல்லாமல் இருப்பதற்காக இது போன்று பேசி வருகிறார்கள். இவ்வாறு சுதா பரமசிவம் தெரிவித்தார். நயினார் நாகேந்திரனும் சுதா பரமசிவமும் நெல்லையை சேர்ந்தவர்கள். அது போல் பாஜகவுடன் கூட்டணி தேவையில்லை என நேற்று முன் தினம் பேசிய மற்றொரு அதிமுக அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசனும் நெல்லையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    ADMK activist Sudha Paramasivam says that we worked hard for BJP's win in Tirunelveli.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X