வேகமாக வந்த பியூஷ் கோயல்.. உடன்பாடு ஏற்படாமல் டெல்லி திரும்பியது ஏன்.. பரபர தகவல்
அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
Recommended Video

சென்னை: 3 மணி நேரத்திற்கும் மேலாக அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தையும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால் பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரப்போகிறது. இதனால் எல்லா கட்சிகளும் ஒரு பக்கம் தீவிரமான பிரச்சாரத்திலும் மற்றொரு பக்கம் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையிலும் இறங்கி உள்ளனர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை ஒரு தொழிலதிபர் வீட்டில் நேற்று இரவு சென்னை வந்த பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.

இழுபறி நீடிப்பு
இரவு 10 மணிக்கு பேச்சுவார்த்தை ஆரம்பித்து, நள்ளிரவு தாண்டி 1 மணி வரை நீடித்தது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு சில எம்பி தொகுதிகள் தேவை என்பதால் பாஜக முதலில் 12 தொகுதிகள் கேட்டுள்ளது. இதற்கு அதிமுக எடுத்த எடுப்பிலேயே சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

4 தொகுதிகள் மறுப்பு
அதன்பின்னர் 10 தொகுதிகளாவது தங்களுக்கு தந்தே ஆக வேண்டும் என்று கேட்டுள்ளது. குறிப்பாக தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, நெல்லை, மதுரை ஆகிய இந்த 10 தொகுதிகளை விட்டுத்தர பாஜக விரும்பவே இல்லையாம். ஆனால் மதுரை, நெல்லை, தென்சென்னை, தஞ்சை இந்த தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்க போவதாகவும், அதனால் இந்த 4 தொகுதிகளை மட்டும் தர விருப்பமில்லை என்றும் அதிமுக தரப்பில் நேரடியாகவே சொல்லப்பட்டு விட்டதாம்.

பேச்சுவார்த்தை
அதனால் விடிய விடிய நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஒரு முடிவும் எட்டப்படாத சூழ்நிலையில், திரும்பவும் ஒரு ரவுண்டு பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் நடத்தப்படும் என தெரிகிறது. இன்று அல்லது நாளை பாஜக-அதிமுக ஒன்றுகூடி மீண்டும் ஆலோசனை நடத்தும் என்றும்

பலம் வாய்ந்த கூட்டணி
கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுக்கும் கேட்பதை தர முடியாவிட்டாலும் சிக்கல் ஏற்பட்டுவிடும் என அதிமுக தயக்கம் காட்டுகிறாம். ஓரளவு பலம் வாய்ந்த கூட்டணியாக உருவாக கணிசமான சீட்டுகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதுடன், பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு எங்கிருக்கிறதோ அதனடிப்படையிலேயே தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் முடிவிலும் கறாராக இருக்கிறதாம்.

இறுதி முடிவு
பாஜக - அதிமுக தலைவர்கள் மீண்டும் கூடி பேச்சுவார்த்தை நடத்தி முடித்து மனப்பூர்வமான சம்மதத்தை அடுத்தே கூட்டணி முடிவு இறுதி செய்யப்பட்டு பகிரங்கமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

எட்டப்படவில்லை
ஆனால் விடிகாலை 3 மணி வரை விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்தும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. எனினும், பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே பியூஸ் கோயல் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications