Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்கோர் செய்யும் "தலைவர்".. பொதுக்குழு விவகாரம்.. எடப்பாடிக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு கேஸ் தள்ளுபடி

பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு இன்று ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார்திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு சென்னை ஹைகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளது.

 23 தீர்மானங்கள்

23 தீர்மானங்கள்

இதில், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டுமென சென்னை ஹைகோர்ட் விதித்த தீர்ப்பு ஜுன் 23ம் தேதி நடந்த கூட்டத்தில் மீறப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்... இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் அதாவது 7ம் தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத்தடை விதித்து நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

பொதுக்குழு

பொதுக்குழு

நடந்து முடிந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டுமென சென்னை ஹைகோர்ட் விதித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது இந்த உத்தரவானது நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்டது.. அதாவது உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது எனக் கூறி ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தது.

 வைரமுத்து

வைரமுத்து

அதேபோல, முன்னதாக, ஜுன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் மூன்று கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களை தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இவர்களை தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவைத் தலைவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது என்பதால், ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

தள்ளுபடி

தள்ளுபடி

இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது, சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கும், இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், மேல்முறையீடு வழக்கு விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட மூன்று கூடுதல் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+