திருப்பதியில் கண்ணை மூடி ஆழ்ந்த தியானத்தில் எடப்பாடி! சாமி தரிசனத்திற்கு பின் என்ன செய்தார் பாருங்க
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் திருப்தி சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசிய அரசியல் களமும் இப்போது பரபரப்பில் இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தேர்தல் வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டன.

தேசியளவில் ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. தேசிய அரசியலில் நிதிஷ்குமார் கிளப்பிய பரபரப்பு அனைவருக்கும் தெரியும்.
அதிமுக: அதேநேரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே எப்போதும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் நேரடி போட்டி. திமுக கூட்டணி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேநேரம் மறுபுறம் அதிமுக எந்தவொரு தேசிய கூட்டணியிலும் இல்லை. என்டிஏ கூட்டணியில் இருந்து அவர்கள் கடந்தாண்டே வெளியே வந்துவிட்டனர்.
தேர்தல் சமயத்தில் அதிமுக மீண்டும் என்டிஏ கூட்டணிக்குச் சொல்ல வாய்ப்புள்ளதாகச் சிலர் கூறினர். அதற்கும் கூட ஜெயக்குமார் திட்டவட்டமாக நேற்று பதிலளித்துவிட்டார். பாஜக கூட்டணிக்குள் இனி அதிமுக செல்லாது என்று அவர் கூறிவிட்டார். எனவே, தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளை வைத்து அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என்றே தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி ஆன்மீக பயணம்: லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசியலில் இப்படிப் பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆன்மீக பயணத்திற்குச் சென்றுள்ளார்.
ஆன்மீகத்தில் பலத்த நம்பிக்கை கொண்ட எடப்பாடி பழனிசாமி, தொடர்ச்சியாகக் கோயில்களுக்குச் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். கடந்த காலங்களில் பல கோயில்களுக்கு அவர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்கிடையே லோக் சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானைத் தரிசிக்க நேற்று மாலை குடும்பத்துடன் திருப்பதி மலைக்குச் சென்றார்.

கண்களை மூடி தியானம்: முதலில் திருப்பதி மலையில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகைக்கு அவர் சென்ற நிலையில், அங்கிருந்த தேவஸ்தான அதிகாரிகள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். நேற்று மாலை அவர் வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி வராஹ சாமியைத் தரிசித்தார். பிறகு எடப்பாடி பழனிசாமி கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தார்.
தொடர்ந்து கோயிலிலேயே ஒரு இடத்தில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமி கொஞ்ச நேரம் இரண்டு கண்களையும் மூடி அப்படியே தியானத்தில் மூழ்கினார். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானம் செய்த எடப்பாடி பழனிசாமி பிறகு விஐபி விருந்தினர் மாளிகைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து இன்று காலை அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். ஏழுமலையான் கோவிலில் இன்று நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையிலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications