ஒரு வீடு விட்ராதே, சரக்கெல்லாம் சரியா போட்ருங்கப்பா.. பெரியகுளத்தில் கலகலப்பு!
மளிகை பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்க தேனி மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது.
Recommended Video

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேனி தொகுதியில் சத்தமே இல்லாமல் ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரம் நடந்து வருகிறதாம்!
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாசம்கூட இல்லை.. எல்லா கட்சிகளுமே தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கி வருகிறது. இதில் ஒரு சில கட்சிகள், மற்றும் ஒரு சில வேட்பாளர்கள் கட்டாயம் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
அப்படித்தான் தேனி மாவட்டத்திலும் பிரதான கட்சியின் "பவ்யமான" தலைவருக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மட்டும் அவர் ஜெயிக்காவிட்டால், அவ்வளவுதான்.. மானமே போய்விடும் என்று நினைக்கிறாராம்.

மளிகை கடை
அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை தந்து எசகுபிசகாக மாட்டிக் கொள்ளவும் கூடாது என்று உஷாராக திட்டம் போட்டுள்ளார்களாம். அதன்படி, வாக்காளர்களை கவர, அவங்கவங்க வீடுகளுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி தர போகிறார்களாம். மளிகை கடைகளிலிருந்து பொருட்கள் எல்லாம் வீடுகளுக்கு போய்விடும். அதற்கான பில் தொகை அந்தந்த கடைகளுக்கு கட்சி கொடுத்துவிடும். ஆக, இதில் வாக்காளர்கள் & வேட்பாளர்கள் சந்தித்து கொள்ள வாய்ப்பே இல்லை.

விசேஷம்
அதேபோல, அந்த பகுதியில் நடக்கும் கும்பாபிஷேகங்கள், ஊர் திருவிழாக்கள் என கோயில் விசேஷம் எதுவாக இருந்தாலும் அந்த செலவை அந்த கட்சியே ஏற்பதாக உறுதி அளித்துள்ளதாம்.

நியூஸ்பேப்பர்
இதை தவிர, ஒவ்வொரு வீட்டிலும் காலையில் பால் பாக்கெட் போடுபவர்கள், நியூஸ் பேப்பர் போடுபவர்களையும் உஷார்படுத்தி வைத்திருக்கிறார்களாம். அதாவது ஒரு வீட்டுக்கு தினமும் எளிதாக சென்று வரக்கூடிய நபர் யாரோ அவர்களை வைத்து பால், பேப்பர் போடும்போது கூடவே "முக்கியமான"தையும் சேர்த்து திணித்துவிட பிளான் உள்ளதாம்.

பக்கா பிளான்
பூத் கமிட்டி சம்பந்தப்பட்டவர்கள், அதற்காக குறிப்பிட்ட நபர்களை "கலெக்ட்" செய்து "கரெக்ட்" செய்தும் வருகிறார்கள். ஆக மொத்தம் ஒரு முடிவோடுதான் இருக்காங்க போல!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications