மதுசூதணன் சிஷ்யர்.. அதிமுக மா.செ.ராஜேஷ் வீட்டில் ரெய்டு! இட்லி, வடை, பூரி மசால் என களைகட்டிய பந்தி!
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், அங்கு திரண்ட ஆதரவாளர்களுக்கு காலை டிபனாக இட்லி, வடை, பூரி மசால், வடகறி, என தடபுடல் விருந்து வைக்கப்பட்டது.
மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதணின் அரசியல் சிஷ்யரான ஆர்.எஸ்.ராஜேஷ் தற்போது அதிமுக சென்னை வடக்கு மாட்டச் செயலாளராக உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டிட்ட இவர் தோல்வியை தழுவினார். அதேபோல் கடந்த 2021 தேர்தலிலும் ஆர்.கே. நகரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

ஆனாலும் வரும் தேர்தலில் இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற முனைப்பு காட்டும் இவர், கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் கூட மாற்றுக்கட்சியினரை அதிமுகவுக்கு அழைத்து வந்த எடப்பாடி பழனிசாமியிடம் சபாஷ் வாங்கினார். இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.
இது குறித்து தகவலறிந்து திரண்ட ஆதரவாளர்களுக்கு காலை டிபனாக சுடச்சுட இட்லி, வடை, பூரி மசால், கூடவே வடகறி, பொங்கல் என வகை வகையாக வாங்கிக் கொடுத்து பந்தி வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications