சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாம பெத்த பிள்ளைக்கு அவங்க பேர் வைக்கிறாங்க..சிவகாசியில் பிரம்மாண்டம்..எடப்பாடி பழனிச்சாமி சரவெடி

Google Oneindia Tamil News

சென்னை: திராவிட மாடலை உருவாக்கியது அதிமுகதான் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். திராவிட மாடல் என்று சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, நாம் பெற்ற பிள்ளைக்கு யாரோ பேர் வைப்பது வேதனையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பின்னர் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு வருகை தந்துள்ளார்.

சென்னையிலிருந்து காலை விமானம் மூலமாக புறப்பட்ட பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அடிமடியில் கை வைத்த ஓபிஎஸ் டீம்! அதிமுக ஆபிஸ் ஆவணங்கள் 'இவர்’ வீட்டிலா இருந்தது? வெளியான பரபர தகவல்!அடிமடியில் கை வைத்த ஓபிஎஸ் டீம்! அதிமுக ஆபிஸ் ஆவணங்கள் 'இவர்’ வீட்டிலா இருந்தது? வெளியான பரபர தகவல்!

சிவகாசியில் பொதுக்கூட்டம்

சிவகாசியில் பொதுக்கூட்டம்

மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது திமுக அரசை கடுமையாக சாடினார். தரமான சிகிச்சை தரவேண்டும் என்று 350 கோடி ரூபாயில் மருத்துவக்கல்லூரி விருதுநகர் மாவட்டத்தில் கட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திமுகவினர் திறந்திருக்கின்றனர். நாம பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பேர் வைத்தது வேதனையாக இருக்கிறது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

நாம் கஷ்டப்பட்டு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்து பிரம்மாண்டமாக கட்டி அதை நாம் திறக்கமுடியாமல் போய் விட்டது. 7 சட்டக்கல்லூரிகள் கொண்டு வந்தோம். 70க்கும் மேற்பட்ட அரசுக்கல்லூரிகள் கொண்டு வந்தோம், பாலிடெக்னிக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். பல பள்ளிகளை தரம் உயர்த்தி நிறைய மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கு வழி வகுத்தோம். எந்த நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறதோ அந்த நாடு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுத்த அரசு அதிமுக அரசு.

எது திராவிட மாடல்

எது திராவிட மாடல்

உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகம் பேர் உயர்கல்விக்கு சென்றனர். இதுதான் சாதனை மூச்சுக்கு முன்னூறு முறை திராவிட மாடல்..திராவிட மாடல் என்று பேசும் ஸ்டாலின் என்ன சாதனை செய்தார். எல்லாம் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த சாதனை என்று சரவெடியாக வெடித்தார்.

கொடுக்க முடியுமா?

கொடுக்க முடியுமா?

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, சீருடை, பை, புத்தகம் என பல திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் அதை நிறுத்தி விட்டனர். ஒரு மடிக்கணினி 12 ஆயிரம் ரூபாய், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொடுக்க முடியவில்லை என்றார். ஏழை எளிய மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு இலவச லேப் டாப் அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது என்றார் எடப்பாடி பழனிச்சாமி. 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. இன்றைய ஆட்சியாளர்கள் மடிக்கணினி திட்டத்தை நிறுத்தி விட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

English summary
Edappadi Palanisamy said that AIADMK created the Dravidian model. Edappadi Palaniswami questioned what Stalin did to call the Dravidian model and said that it is painful for someone to name the child we have.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X