சென்னை வெள்ளம்! ஸ்டாலின் தான் வந்தாரு, நீச்சல் அடிக்க விட்டாரு.. மக்கள் சொல்றாங்க.. தாக்கிய எடப்பாடி
சென்னை: சென்னையில் 20 செமீ அளவுக்கு மழை பெய்தாலும் வெள்ளம் தேங்காது என்று அமைச்சர் கூறிய நிலையில், ஒரு அம்மா ஸ்டாலின் தான் வந்தாரு.. நீச்சல் அடிக்க விட்டாரு என்ற நிலை சென்னையில் ஏற்பட்டது என்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தூத்துக்குடியில் இன்றும் வெள்ளம் வடியவில்லை. 8 நாட்கள் ஆகியும் இன்னும் தூத்துக்குடி மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. உடனடியாக ராட்சத மோட்டார்களை வைத்து எங்கு எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ.. அங்கு எல்லாம் மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றியிருந்தால், விரைவில் இயல்பு நிலை திரும்பியிருக்கும்.

ஆனால் இவங்க ஒன்னுமே செய்யலை. அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள், ஓடைகளில் எல்லாம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பணிகள் நடந்தது. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் முடிந்தது. மீதமுள்ள 20 சதவீத பணியை கூட 2 வருஷம் ஆகியும் திமுக செய்யவில்லை. இந்த 20 சதவீதத்தை கூட செய்யாமல் கமிஷன் ஊழலினால் அப்படியே விட்டு விட்டது.
ஆட்சியை காப்பாற்ற: எல்லாருக்கும் கமிஷன். மக்கள் எல்லாரும் இப்போது சொல்கிறார்கள்.. நீங்க செய்த பணியை முடித்திருந்தால் இப்படி ஒரு பாதிப்பு வந்திருக்காது என்று.. தண்ணீர் எல்லாம் அப்படியே போயிருக்கும் என்றும்.. நாங்க சாப்பிட்டு 3 நாட்கள் ஆகுது என்று மக்கள் கூறும் போது எங்கள் மனம் கலங்கியது. ஆனால் இவர்கள் சொல்கிறார்கள் எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தோம் என்று.
இப்படி ஓட்டு போட்ட மக்கள் இங்கே துன்பத்தில் இருக்கும் போது அவர் எங்கே இருந்தார் என்றால் டெல்லியில்.. வாக்களித்த மக்களை பார்க்க நேரமில்லை. ஊழலால் இந்த ஆட்சி மிக மோசமாக நிலையில் உள்ளது. எனவே ஆட்சியை காப்பாற்ற ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க சென்றுவிட்டார். ஆட்சி அதிகாரத்திற்காக இந்தியா கூட்டணி சார்பில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுவிட்டார்.
அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும்! நாடாளுமன்ற தேர்தலுக்குள் மாற்றம் வரும்.. முழங்கிய எடப்பாடி
உடனே சென்றிருக்க வேண்டும்: இங்கே இருக்கிற தூத்துக்குடிக்கு போகவில்லை. ஓட்டு போட்ட மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்ற அக்கறை இல்லை. சரி அதற்கு அடுத்த நாளாவது தென் மாவட்டங்களுக்கு சென்றிருக்கலாம். மக்கள் மீது அக்கறை இல்லா முதலமைச்சர்.. ஆனால் அன்றைக்கும் போகவில்லை..
அதற்கு அடுத்த நாள் தான் செல்கிறார். அப்போது போய் என்ன செய்வீங்க.. ஒரு முதலமைச்சர் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே அங்கு சென்றிருக்க வேண்டும். அப்போது தான் அதிகாரிகள் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருப்பார்கள்.. மக்களை மீட்டு இருப்பார்கள்.
நீச்சல் அடிக்க விட்டாரு: மிக்ஜாம் புயல் வந்தபோது சென்னையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருந்தது. அதற்கு முன்பு தான் ஒரு அமைச்சர் சொன்னார். 20 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலும் சென்னையில் ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது என்று சொன்னார்கள்.. ஒரு சொட்டு தண்ணீர் இல்லை.. சென்னை நகரே குளமாக தான் காட்சியளித்தது. அப்போது வெள்ளத்தில் நடந்து வந்த ஒரு அம்மா சொல்றாங்க.. ஸ்டாலின் தான் வந்தாரு.. நீச்சல் அடிக்க விட்டாரு.. என்று...
நீங்க என்ன செஞ்சீங்க: நான் தொலைக்காட்சியில் வந்தது பார்த்தேன்.. ஸ்டாலின் வந்தாரு.. நீச்சல் அடிக்க விட்டாரு.. எவ்வளவு கொடுமையான விஷயம். இப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்தை வைத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் பேசுகிறார் 2015.. 2015 என்று.. ஆனா நீங்க என்ன செஞ்சீங்க.. அத முதலில் சொல்லுங்க.. நீங்க என்ன செஞ்சீங்க.. 2015-ல் என்ன நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும்..
அவர் சொல்கிறார் செம்பரம்பாக்கம் ஏரியில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது என்று.. ஆனால் அப்போது 35 ஆயிரம் கன அடி நீர் தான் திறக்கப்பட்ட்டது. இது தெரிந்ததும் அதை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார் ஸ்டாலின். செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீரால் அன்று சென்னையில் வெள்ளம் ஏற்படவில்லை. அதற்கு கீழே உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள் கனமழையால் நிரம்பி உபரி நீர் வெளியே அந்து அடையாறு ஆற்றில் கலந்துதான் அன்று குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது தான் பாதிப்பு ஏற்பட்டது.
16 பேர் உயிரிழப்பு: அதே போல தான் இன்று தாமிரபரணி ஆற்றில் வெள்ளம். அந்த ஆற்றங்கரையோர மக்களை பாதுகாப்பாக மீட்டு வைத்திருக்க வேண்டாமா.. 14 ஆம் தேதி தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது. இது தமிழக அரசுக்கும் தெரியும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யாமல் தூங்கி விட்டது. ஒரு லட்சம் அடி தண்ணீரை திறந்துவிட்டு விட்டு மக்களை பாதுகாக்காமல் விட்டுடீங்க..
முன்னாடியே மக்களை பாதுகாத்து இருக்க வேண்டாமா.. திருநெல்வேலியில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். சரியான நேரத்தில் இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த 16 பேரின் உயிர் போயிருக்காது. இப்போதும் தூத்துக்குடியில் சாலை வசதி இல்லாமல், கரண்ட் இல்லாமல், மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். 8 நாட்கள் ஆகியும் இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. இப்படி நிர்வாக திறமையற்ற அரசு தான் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications