Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“டபுள் ஷாக்”கில் அண்ணாமலை.. அடித்து ஆடும் எடப்பாடி! ஆபரேசன் தாமரைக்கே “பூமராங்கான” ஆபரேசன் “இலை”

பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் அண்ணாமலையை விமர்சித்துவிட்டு கட்சியைவிட்டு வெளியேறுபவர்களை எடப்பாடி பழனிசாமி இணைப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவிலிருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு அக்கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து இருப்பது கூட்டணி கட்சி தலைவராக அண்ணாமலைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த நிர்மல் குமார் நேற்று முந்தினம் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

420 மலை, திமுக அமைச்சருடன் ரகசியமாக பேசுகிறார், மனநலம் குன்றியவர் போல் நடந்துகொள்கிறார் பாஜகவினரை செருப்பாக பயன்படுத்துகிறார் என பல்வேறு விமர்சனங்களை நிர்மல் குமார் முன்வைத்தார்.

அதிமுகவில் இணைந்தது ஏன்?

அதிமுகவில் இணைந்தது ஏன்?

அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் இணைந்த அவர், "2017 ஆம் ஆண்டில் இருந்து அதிமுகவை பல கஷ்டங்கள் பல பிரச்சனைகளை தாண்டி கட்டி காப்பாற்றியவர் எடப்பாடியார். இன்று தொண்டர்களுடைய மதிப்பையும் பெற்று நம்பிக்கையையும் பெற்று ஒரு கட்சியை இவ்வளவு தூரம் கொண்டு சென்று கட்டிக்காப்பாற்றி ஆளுமையாக இருப்பதற்கு மிகப்பெரிய உழைப்பு அவரிடம் இருக்கிறது.

 திமுகவை எதிர்ப்பார்

திமுகவை எதிர்ப்பார்

எளிதில் ஆளுமையாக முடியாது. ஒவ்வொரு நாளும் அதற்கான வேலை செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்துதான் நான் கட்சியில் சேர்ந்தேன். இந்த காலத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் எடப்பாடி அவர்கள்தான் எதிர்காலமாக இருப்பார். அவரால்தான் அதை செய்ய முடியும். வேறு யாராலும் முடியாது. அந்த நம்பிக்கை எடுக்க வலுவாக உள்ளது." என்று ஒன் இந்தியா பேட்டியில் தெரிவித்தார்.

திலிப் கண்ணன் ராஜினாமா

திலிப் கண்ணன் ராஜினாமா

இந்த நிலையில் நேற்று மதியம் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணனும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ஒரு படி மேலே போய் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். "பாஜக மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை பொன்.பாலகனபதியை அசிங்கப்படுத்தினார் என்றும், நைனார் நாகேந்திரனை மனிதனாக கூட மதித்தது இல்லை." என்று விமர்சித்தார்.

தலைவர்களை மதிக்காத அண்ணாமலை

தலைவர்களை மதிக்காத அண்ணாமலை

மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு **** என்று போலீஸ் தோரணையில் ஏளனமாக அண்ணாமலை பேசுவதாக குற்றம்சாட்டி இருந்த திலிப் கண்ணன், டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார் என குற்றம்சாட்டி இருக்கிறார்.

ஒன் இந்தியா பேட்டி

ஒன் இந்தியா பேட்டி

நேற்று நமது ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த திலிப் கண்ணனிடம்
"நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்திருக்கிறார். நீங்கள் பாஜகவின் கொள்கைகளை தீவிரமாக ஏற்று செயல்பட்டவர். அடுத்து எந்த கட்சிக்கு செல்ல இருக்கிறீர்கள்." என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, "நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை." என்று கூறினார்.

 ஆபரேசன் இலை

ஆபரேசன் இலை

இந்த நிலையில் இன்று காலை நிர்மல் குமார் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாஜகவில் இணைந்து இருக்கிறார் திலிப் கண்ணன். அந்த படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள திலிப், #எடப்பாடியார்_என்னும்_ஆளுமை என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு இருக்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் அண்ணாமலையை விமர்சித்துவிட்டு கட்சியைவிட்டு வெளியேறுபவர்களை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+