எடப்பாடி அண்ணன் கிட்ட இருக்க பிரச்சினை என்ன தெரியுமா? அண்ணாமலை சொல்றதை பாருங்க
கோவை: நீங்க செலவே பண்ண மாட்டீங்க என்று சொன்னீங்க.. ஆனால் டீ குடிப்பதற்கு கூட செலவு செய்யாமல் இதை எப்படி பண்ண முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.
அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 295 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறோம். திமுகவை போல கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை அப்படியே இந்த தேர்தலுக்கு சொல்வது கிடையாது.

2024 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் கூட நாங்க என்ன சொல்கின்றோமோ அதை செய்ய போகிறோம். நாங்கள் செய்துவிட்டு இங்கே நிற்கிறோம். கோவையை பொறுத்தவரைக்கு எல்லாருக்கும் தெரியும். பாஜக என்ன செய்தது. மோடி என்ன செய்தார் என்று எல்லாருக்கும் தெரியும். கோவை நகரில் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று தெரியும்.
கோவைக்கு உண்மையான வளர்ச்சியை கொடுப்பதற்காக நான் இங்கு போட்டியிடுகிறேன். மக்களை நம்பி.. சாமான்ய மக்களை நம்பி.. சாதாரண மனுஷன் இங்கே ஜெயிக்க முடியும் என்பதை நிரூபிக்க இந்த லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள், நீங்க செலவே பண்ண மாட்டீங்க என்று சொன்னீங்க.. ஆனால் டீ குடிப்பதற்கு கூட செலவு செய்யாமல் இதை எப்படி பண்ண முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு அண்ணாமலை கூறியதாவது:-
எடப்பாடி அண்ணன் கிட்ட என்ன பிரச்சினை என்னவென்றால், ஒருத்தர் என்ன சொல்றாங்க என்பதை முழுமையாக கேட்பது இல்லை. எதுவுமே கேட்பது இல்லை. கேட்கக்கூடிய தன்மை எல்லாம் இழந்துவிட்டார்கள். ஏனென்றால் நாம் சொல்லியிருப்பது ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் கோவையில் ஜெயித்து காட்ட முடியும் என்பது என்னுடைய சவால்..
ஏன் மற்ற கட்சியை இந்த சவாலை விட சொல்லுங்கள் பார்க்கலாம். மக்கள் மீது நம்பிக்கை இருப்பதால் இப்படி சொல்கிறோம். இன்றைக்கு பாஜக கட்சிக்காரர்கள், தொண்டர்கள் யாரும் காண்டிராக்டர்கள் இல்லை. யாருமே ஹைவே காண்டிராக்டர் இல்லை. ஆனால் நீங்க சொன்ன கட்சிக்காரர்கள் யாரையெல்லாம் நம்பி இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
எத்தனை ஹைவே காண்டிராக்டர்கள் நிற்கிறார்கள். இப்படி சம்பாதித்த பணம் எல்லாம் யாரு கையில் இருக்கிறதோ அவர்கள் தான் வேட்பாளர்கள். சாமானிய மக்களுக்கு இந்த வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே தெரியும். ஆனால் பாஜக தொண்டர்கள் தங்களுடைய கை காசை போட்டு விளம்பரம் செய்கிறார்கள். சுவர் விளம்பரமா அவர்கள் கை காசை போடுகிறார்கள். இது தான் மாற்று அரசியல். மாற்று அரசியல் செய்யாமல் கல்லா பெட்டி கட்டுறவங்களுக்கு இது எப்படி தெரியும்.
யாரு என்ன பேசுறாங்கன்னு காது கொடுத்து கேட்க வேண்டும். நாங்கள் சொல்கின்ற மாற்று அரசியல் என்னவென்றால், எடப்பாடி அண்ணன் டீ குடிக்க வேண்டும் என்றால் கூட யாருக்கிட்டையாவது பணம் வாங்கி தான் டீ குடிப்பார் என இருக்கிறது. அதனால் தான் டீ குடிப்பதற்கு சம்பளம் கொடுக்கிறார்கள். நாங்கள் அப்படி இல்லை.. டீ குடிப்பதற்கு கூட கை காசை தான் போடுவோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?











Click it and Unblock the Notifications