சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவின் ஆர்மியாகவே போலீஸ் செயல்படுகிறது.. ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்த அதிமுக நிர்வாகிகள்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பென்ஜமின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஒரே கட்டமாக வரும் பிப். 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

பெண்கள் சென்டிமென்ட்.. கேட்ச் செய்த திமுக.. பாயிண்ட் டூ பாயிண்ட் வைக்கும் புதிய தேர்தல் விளம்பரம்! பெண்கள் சென்டிமென்ட்.. கேட்ச் செய்த திமுக.. பாயிண்ட் டூ பாயிண்ட் வைக்கும் புதிய தேர்தல் விளம்பரம்!

 அதிமுக சட்ட ஆலோசனை குழு

அதிமுக சட்ட ஆலோசனை குழு

இதில் ஆளும் திமுக தரப்பு தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறி வருவதாக அதிமுக குற்றஞ்சாட்டி வந்தது. இந்தச் சூழலில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பென்ஜமின் ஆகியோரை கொண்ட அதிமுக சட்ட ஆலோசனை குழு நேற்று மாலை 4 மணி அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினர். அப்போது திமுகவின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து அதிமுக சட்ட ஆலோசனை குழு புகார் அளித்தனர்.

அராஜகம்

அராஜகம்

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகிகள், "விருப்பு வெறுப்பு இல்லாமல், ஜனநாயகத் தன்மையோடு மாநில தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். ஆனால், மாநில தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க திமுகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. அவர்களும் திமுகவின் அராஜகதிற்கு துணை போகிறார்கள். திமுக நிர்வாகிகள் மாநில தேர்தல் அதிகாரிகள் போலச் செயல்படுகிறார்கள். திமுகவின் ஒரு அங்கமாகவே மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.

மிரட்டல்

மிரட்டல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 22 அதிமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். ஆளும் திமுக தரப்பு கொடுக்கும் மிரட்டல் காரணமாகவே அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான். இதைத் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது குறிப்பாக, காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்பாளர் ஜானகிராமன்,கொலை மிரட்டல் காரணமாகத் தற்கொலை செய்துள்ளார்.

Recommended Video

    நோ, நோ.. ஊரு பாவம்.. ஊரை விட்டுருங்க.. எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்த கனிமொழி.. குபீர் சிரிப்பலை
     ஒரே நாடு ஒரே தேர்தல்

    ஒரே நாடு ஒரே தேர்தல்

    சொல்லப்போனால் திமுகவின் ஆர்மியாக தமிழக போலீசார் செயல்படுகின்றனர். போலீசாருக்கும் அதிமுகவை மிரட்டுவதிலேயே ஆர்வமாக உள்ளது. உதயநிதி பிரச்சாரங்களில் தேர்தல் விதிகள் ஒன்று கூட பின்பற்றுவது இல்லை. வரும் 2024ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். அப்போது அதிமுக வெற்றி பெறும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

    English summary
    ADMK ex ministers meets Tamilnadu governor. Ex admk ministers complaints that state election commission is favouring DMK party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X