அதிமுக கொடி, சின்னம் அதிமுகவுக்கே சொந்தமல்ல.. ஓபிஎஸ் வக்கீல் பகீர் வாதம்! அதிர்ந்துபோன இபிஎஸ் தரப்பு
சென்னை: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது தொடர்பான வழக்கில், இன்று ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்த வாதம் குறித்து இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அவற்றை பயன்படுத்துவதற்கு ஒபிஎஸ் அணியினருக்குத் தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர் செல்வம் தரப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தீர்ப்பு: அந்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சு தீர்ப்பு அளித்தது. அதில் அதிமுகவின் கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனி நீதிபதியிடம் உள்ள பிரதான வழக்கில், இதுகுறித்து முறையிட்டுக் கொள்ள ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "அதிமுக கொடி, சின்னம், அலுவலக முகவரியையும் பயன்படுத்தத் தடை கோரி ஓபிஎஸ் வழக்கைத் தாக்கல் செய்தார். முதலில் இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்தத் தனி நீதிபதி தடை விதித்தார். இந்த தடையை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்திருந்தார்.
சொந்தமில்லையாம்: இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர்கள் அதிமுகவின் கொடி அதிமுகவுக்குச் சொந்தமல்ல என்ற வினோத வாதத்தை முன்வைத்தனர். மேலும், அதிமுக அலுவலகம் டிரஸ்ட் பெயரில் இருப்பதாகப் புதிதாக வாதத்தை முன்வைத்தனர். ஆனால், இதை ஏற்க முடியாது. இது தவறு.
அதிமுக அலுவலகத்தை அதிமுகவின் ரெஜிஸ்டர்ட் ஆபீசாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக கொடி என்பது அதிமுக சட்ட விதிகளில் இருக்கிறது. அப்படியிருக்கும் போது அதிமுக கொடி அதிமுகவுக்கே சொந்தமில்லை என்பது ஏற்கத்தக்கது இல்லை. இதை அவர் எப்படி வாதமாகச் சொல்ல முடியும். அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்துவதால் தேவையில்லாத குழப்பங்கள் வருகிறது.
தேர்தல் ஆணையம்: பொதுக்குழுவைக் கூட்டக் கூடாது என வழக்கு தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று தோற்றுப் போனார்கள். அடுத்தது பொதுக்குழுவே தவறு என்றார்கள் இப்போது பொதுக்குழு தீர்மானங்கள் தவறு என்று தனியாக வழக்குப் போட்டுள்ளனர். அதில் 19ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது. இது தனி.. இப்போது அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குகிறது. சட்ட விதிகள் திருத்தப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு ஒற்றை தலைமையாகப் பொதுச்செயலாளர் தலைமையில் இயங்கும் என்று தீர்மானம் போடப்பட்டது. இந்த தீர்மானத்தைத் தேர்தல் ஆணையமே அங்கீகரித்துவிட்டது.
இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு, அதிமுக எடப்பாடி தலைமையில் இயங்குகிறது என்பதையும் தேர்தல் ஆணையம் அங்கீரித்துவிட்டது. இதெல்லாம் நடந்த பிறகு அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடை பயன்படுத்துவதே தவறு. இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதாக வழக்கு தொடர்ந்தோம். இதில் இப்போது தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளது.
நீதிபதி சொல்வது என்ன: பிரச்சினை எதாவது இருந்தால் சிவில் சூட்டில் தீர்த்துக் கொள்ளுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். இதைப் பொறுத்தவரை ஏற்கனவே அதிமுக சட்டத் திருத்தங்கள் மாற்றப்பட்டதைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது. இருந்தாலும், சிவில் வழக்கு தொடர்ந்தால் அனைத்து ஆவணங்களையும் வாங்கி முறைப்படி விளக்குவார்கள். இதற்குப் பல ஆண்டுகள் வரை கூடப் போகலாம்.
ஓபிஎஸுக்கு இப்போது இருக்கும் ஒரே நோக்கம்.. அதிமுக நன்றாக இருக்கக் கூடாது. எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதுதான். அதற்குத்தான் இப்படியெல்லாம் அவர் செய்து வருகிறார். ஏற்கனவே மாவட்டம் தோறும் கொடிகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து ஓபிஎஸ் தரப்புக்கு எதிராகப் போலீசிலும் புகார் அளித்துள்ளோம்" என்றார்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications