பொதுக்குழு செல்லாது.. எடப்பாடி வாதமே தவறு.. பாயிண்டை பிடித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்!
சென்னை: ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ் இணை இருங்கிணைப்பாளர். அதனால், எடப்பாடியோடு இணைந்து ஓபிஎஸ் செயல்படவில்லை என்று அவர்கள் நீதிமன்றத்தில் சொல்லவே முடியாது என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவின் கூட்டத்தைத்தான் 11-ஆம் தேதி நடத்த திட்டமிடுகிறார்கள் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுகுழுவுக்கான அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாததால் செல்லாது என கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

கோவை செல்வராஜ்
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். ஓபிஎஸ் இல்லத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஷ் பாண்டியன், ஆர்.தர்மர் எம்.பி, கோவை செல்வராஜ் ஆகியோர் வருகை தந்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.

செல்லாது
அப்போது பேசிய கோவை செல்வராஜ், கடந்த ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் கையெழுத்தோடு அழைப்பிதழ் வந்தது. இப்போது ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அனுப்பிய அழைப்பிதழில் தலைமைக் கழகம் எனும் பெயரோடு மட்டும் அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார்கள். அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திடவில்லை. இருவரின் கையெழுத்தும் இல்லாத காரணத்தால் அது செல்லாது.

தன்னிச்சையாக அனுப்ப முடியாது
இப்படி கையெழுத்தே இல்லாத அழைப்பிதழை அனுப்புவதற்கு யார் அனுமதி கொடுத்தது? ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் கையெழுத்து இட்டால்தான் தலைமைக் கழகத்திலிருந்து அழைப்பிதழ் அனுப்ப முடியும். பொதுக்குழுவுக்கான அழைப்பிதழை தன்னிச்சையாக யாரும் அனுப்ப முடியாது. ஜூலை 11ஆம் தேதி நடக்கும் கூட்டம் பொதுக்குழு அல்ல, எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுக் கூட்டத்தைத்தான் நடத்த திட்டமிடுகின்றனர்.

மோசடி கடிதம்?
பொதுக்குழு கடிதம் உண்மையாகவே கட்சியின் கடிதம் தானா? அல்லது மோசடி கடிதமா என்று தெரியவில்லை. யாராவது கையெழுத்து போட்டு அனுப்பியிருந்தால் தான் நம்ப முடியும். அதுவும் அழைப்பிதழில் இரண்டு விதமாக போட்டிருக்கிறார்கள். கொரோனா அதிகமானால், காணொளி வாயிலாக பொதுக்குழு நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள். தெளிவு இல்லாமல் யாரோ அனுப்பியிருக்கிற அழைப்பிதழை ஏற்று அந்த பொதுக்குழுவுக்கு நான் செல்ல மாட்டேன்." எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாமே டிராமா
ஓபிஎஸ் ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஈபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது குறித்துப் பேசிய கோவை செல்வராஜ், "எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு தலைவர் கிடையாது. ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர், ஈபிஎஸ் இணை இருங்கிணைப்பாளர். அதனால், எடப்பாடியோடு இணைந்து ஓபிஎஸ் செயல்படவில்லை என்று சொல்லவே அவருக்கு தகுதி இல்லை. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்திட ஓபிஎஸ் தலைமைக் கழகத்திற்கு கடிதம் அனுப்பியபோது எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. அவர்கள் போடுவது டிராமா. அவர்களுக்கு அதிமுகவை பற்றிக் கவலையே இல்லை.

தூக்கி எறிந்துவிட்டார்
சாதாரணமாக இருந்து, சசிகலா மூலம் முதல்வராக வந்தார். அவரையும் தூக்கி எறிந்துவிட்டார். பின்னர் நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்துவதற்கு ஓபிஎஸ் உறுதுணையாக இருந்தார். இப்போது அவரையும் தூக்கியெறிந்து விட்டார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றி பேசவைத்து குழப்பத்தை ஏற்படுத்தினார். அதிமுகவில் நிலவும் மொத்த சிக்கலுக்கும் காரணம் எடப்பாடி பழனிசாமியின் சதி தான்

முதுகில் குத்துகிறார்கள்
ஆட்சியை காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வம் வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் முதுகில் குத்துகின்றனர். 30 மாவட்ட செயலாளர்களை வைத்துக்கொண்டு கட்சியை கம்பெனி போல் செயல்படுத்துகிறார்கள். கட்சியை நாங்கள் வழிநடத்திச் செல்வோம். ஒருங்கிணைப்பாளரை மாற்றும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்
ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி பேச ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை. உதவி கேட்டு வந்த பெண்களை மானபங்கம் படுத்தியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய ஜெயக்குமாரை, எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். இப்போது அப்பெண்களை வழக்கு தொடுக்க வைத்து, அவரை சிறைக்கு அனுப்புவோம்" என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications