பதவி வந்த உடன் வந்த பணிவு..மகிழ்ச்சியின் உச்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி..அவர் சொன்ன ஒற்றை வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தன்னை ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் பணிவாகவும் மகிழ்ச்சியோடும் நன்றி நன்றி என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இவர் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். அவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டதால் அவரே பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

 கோர்ட் படியேறிய ஓ.பன்னீர் செல்வம்

கோர்ட் படியேறிய ஓ.பன்னீர் செல்வம்


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டவிரோதமாக நடைபெறுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக தேர்தலை நடத்த தடையில்லை அதே நேரத்தில், தேர்தல் முடிவுகளை மறு உத்தரவு வரும் வரை அறிவிக்க கூடாது என அறிவுறுத்தினர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

பொதுக்குழு தீர்மானங்கள்

பொதுக்குழு தீர்மானங்கள்

இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது சரிதான் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தீர்ப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தீர்ப்பு

இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

எம்ஜிஆர் மாளிகை களைகட்டியது

எம்ஜிஆர் மாளிகை களைகட்டியது

அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. தீர்ப்பு வந்த உடனேயே எம்ஜிஆர் மாளிகை களை கட்டியது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நிர்வாகிகள் பூங்கொத்துக்களை கொடுத்தும் சால்வைகளை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதே உற்சாகத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

பொதுச்செயலாளராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்ய அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி என்று கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக அறிவித்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கும் நன்றி என்று கூறினார். செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்ட போதும் அமைதியாகவும் நிதானமாகவும் பணிவாகவும் அனைவருக்கும் நன்றி..நன்றி...நன்றி என்று சொல்லி முடித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் உச்ச பதவி கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தாலும் கூடவே பணிவும் வந்து ஒட்டிக்கொண்டது எடப்பாடி பழனிச்சாமிக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+