அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்..கண் முன் வந்த கலவர காட்சிகள்..காவல்நிலைய கதவை தட்டிய இபிஎஸ் அணி
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகைக்கு பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் மனுஅளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது என்று அதிமுகவினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்தது போல மீண்டும் ஒரு கலவர காட்சிகள் நடந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி அதிமுக. அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ஜெயலலிதாவின் வசமானது. அதிமுகவின் நிரந்தரபொதுச்செயலாளர் என்று அந்த கட்சியினரால் அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் அந்த பதவி அதிகாரம் மிக்க பதவியாகவே இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டார். இதன் பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் ஒற்றைத்தலைமை விவகாரம் வெடிக்கவே தற்போது இடக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 18 , 19-ம் தேதிகளில் மாலை 3 மணி வரை நடக்கிறது. 20-ம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். வாக்கு எண்ணிக்கை 27-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.

ரூ.25000 கட்டணம்
அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்கள், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று, கட்சி சட்ட விதி 20 (அ) பிரிவு - 1 (ஏ), (பி), (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கேட்டு மனு
இந்நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுவதையொட்டி கட்சி தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு எதிரானவர்கள், சமூக விரோதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் போல வேறு எதுவும் நடந்து விடக்கூடாது என்பதனால் முன்கூட்டியே காவல்நிலைய வாசலை தட்டியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி அணி.

எடப்பாடி பழனிச்சாமி திட்டம்
பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று கட்சியின் தலைமை பதவியை முழுமையாக கைப்பற்றிய பின்னரே எடப்பாடி பழனிசாமி தனது அதிரடியை வெளிப்படுத்தப்போகிறாராம். குறிப்பாக தென் மாவட்டங்களில் தனது ஆளுமையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி

இணைக்கும் முயற்சி
சில நிர்வாகிகள் தவிர்த்து கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போகிறாராம். இதற்காக மாநிலம் முழுவதும் மிகப்பெரிய சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளாராம். லோக்சபா தேர்தலுக்குப் முன்பாக கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் ஓ.பன்னீர் செல்வம் பின்னால் சென்றவர்களும், டிடிவி தினகரனின் பின்னால் சென்றவர்களும் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

முட்டுக்கட்டைகள்
அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தேவைப்பட்டால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று அடுத்த ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டார். சசிகலாவையும் சந்திக்கப்போவதாக கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இந்த சூழ்நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சசிகலா, ஓபிஎஸ் போன்ற முட்டுக்கட்டைகளை எடப்பாடி பழனிச்சாமி எப்படி கடக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications