Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமன்னன் ஓடினா என்ன, இருந்தால் என்ன? இதுவா நாட்டுக்கு முக்கியம்? விட்டு விளாசிய எடப்பாடி பழனிச்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமன்னன் படம் ஓடினால் என்ன இருந்தால் என்ன இதுவா நாட்டு மக்களுக்கு தேவை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் 70 சதவிகிதம் உயர்ந்து விட்டது. அதைப்பற்றி கேளுங்கள் அதை விட்டு விட்டு முதல்வரிடம் எதை எதையோ கேட்கிறீர்களே என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தக்காளி விலை உயர்வு பற்றி
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தக்காளி மட்டுமல்ல சின்ன வெங்காயம், பருப்பு, மளிகை சாமான்கள் விலையும் உயர்ந்து விட்டது.

ADMK general secretory Edappadi palanisamy criticize Udayanidhis Mamannan Movie

குட்டி அமைச்சர் ஒருவர் வந்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் படம் எடுக்கிறார் அவரே படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். விலைவாசி உயர்வை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. அவரிடம் போய் செய்தியாளர்கள் விலைவாசி உயர்வை பற்றி கேள்வி கேளுங்கள் என்றார். நீங்களே மாமன்னன் படம் பற்றிதான் கேட்கிறீர்கள் இதுவா வயிற்றுப்பசியை போக்கப்போகிறது என்றார்.

அந்த படத்தைப் பற்றி நிறைய விமர்சனம் வேறு உள்ளது. மாமன்னன் படத்தில் வேதனைக்குறிய விசயம் உள்ளது. இவர்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர். இது பொய்யான தகவல். நான் முதல்வராக பதவியேற்ற போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது சட்டசபையில் சபாநாயகர் தனபால் சட்டசபை கூட்டத்தை கூட்டினார். அப்போது அவரது மைக்கை உடைத்து பெஞ்சை உடைத்து பெரிய ரகளையில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் தனபால் அவர்களின் சட்டையை கிழித்தனர். புனிதமான இருக்கையில் அமர்ந்தனர் திமுகவினர். இவர்களா சமூக நீதியை காப்பாற்றியவர்கள். இவர்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை பாதுகாக்கிறார்களா என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். மாமன்றத்தில் அமர்ந்திருந்த சபாநாயகரை இழுத்து கீழே தள்ளினார்களே அந்த சம்பவத்தை தொலைக்காட்சி மூலம் அனைத்து மக்களும் பார்த்தனர்.
அதை ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை கீழே இறக்கி எங்களோடு அமர வைத்தீர்களே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைத்துள்ளதாக பேசுவதற்கு திமுகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திமுகதான் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெறுவதற்கு அதிமுக கொண்டு வந்த திட்டங்கள்தான்.

அதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட கல்வி புரட்சியால்தான் அனைவரும் கல்வி கற்று இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். அதைப்பற்றி வேறு எந்த கட்சியினரும் பேசுவதற்கும் தகுதி இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+