அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் 13-ம் தேதி நடைபெறும்.. ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அறிவிப்பு!
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
இந்த நிலையில்13-ம் தேதி அன்று அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி, அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதியன்று சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக்த்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்றைய தினம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெறுகிறது எனத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications