"உயிரையே விட்டுடுவேன்".. கடைசியில் விஜயபாஸ்கர் இப்படி அழ ஆரம்பிச்சிட்டாரே.. மலைத்து போன விராலிமலை
விராலிமலையில் விஜயபாஸ்கர் போஸ்டர் வைரலாகி வருகிறது
சென்னை: "தோற்றுவிட்டால் உயிரையே விட்டுடுவேன்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணீர் வடியும் போஸ்டர் விராலிமலையை வியக்க வைத்து வருகிறது.
இந்த முறை அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.. இவர் 3வது முறையாக இந்த தொகுதியில் களம் காண்கிறார்.
அதனால், தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்... இதுபோக, இவர்களது 2 மகள்கள், அப்பா, அண்ணன் என மொத்த குடும்பமும் விஜயபாஸ்கருக்காக வாக்கு கேட்டு வருகிறார்கள்.

திறமைசாலிகள்
வழக்கமாக விஜயபாஸ்கரின் மகள்கள் படுதிறமைசாலிகள்.. இவர்களின் பேச்சு ஒவ்வொரு தேர்தலின்போதும் அந்த தொகுதி மக்களின் மனசை கவர்ந்து வருகிறது. அதுபோலவே இந்த முறையும் விஜயபாஸ்கர் பேசுவதை இந்த மகள்கள் பேசுவதை கேட்கதான் தொகுதி மக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது விராலிமலை பகுதியில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கண் கலங்கி உட்கார்ந்துள்ள போட்டோ இருக்கிறது.. இன்னொரு போட்டோவில் நிஜமாகவே கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.. அந்த போட்டோ க்ளோசப்பில் உள்ளது..

வைரல் போஸ்டர்
அதில், "வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டு கேட்பவர்களே தோல்வியடைந்தால் உயிரை விட்டு விடுவேன் என கூறும்போது 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு, பகல் பாராமல் கஷ்ட காலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும் முடிவு உங்கள் கைகளில்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன... அதாவது தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் உயிரை விட்டுவிடுவேன் என்று பொருள்படும் வகையில், இந்த வார்த்தைகள் இருக்கின்றன.. இந்த போஸ்டர்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயேசுநாதர்
கடந்த வாரம் விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்யும்போது, தொகுதி மக்களிடம் புலம்பி தள்ளிவிட்டார்.. சுகர் இருக்கு, பி.பி. இருக்கு.. மயக்கம்வருது.. மாத்திரை போடறேன்.. எனக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி, இந்த விராலிமலையை இயேசுநாதர் போல தோளில் சுமந்துள்ளேன் என்று சொல்லி கண்ணீர் விட்டார்.. இந்த பேச்சும் அப்போது சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது..

கண்ணீர்
இதற்கு முன்புகூட விஜயபாஸ்கர் 2 தேர்தலை இதே தொகுதியில் சந்தித்துள்ளார்.. அப்போதெல்லாம் இப்படி அழுததில்லை.. இப்போது கண்ணீர் விட்டு கதறி அழ என்ன காரணம்? திமுக வேட்பாளர் பலமாக இருக்கிறார் என்றே அர்த்தமாகிறது..

விசித்திரம்
விஜயபாஸ்கர் சொன்னமாதிரி 10 வருஷம் இந்த தொகுதிக்காக ராத்திரியும் - பகலும் கஷ்டப்பட்டிருந்தால், மக்கள் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மாட்டார்கள்.. நிச்சயம் வந்து கைதூக்கி விட்டுவிடுவார்கள்.. இப்படி அழுது கொண்டிருந்தால், அது தன் மீதான பலவீனத்தையே வெளிப்படுத்தும் என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. இருந்தாலும், விஜயபாஸ்கர் பெயரில் உள்ள இந்த விசித்திர போஸ்டரை பார்த்து விராலிமலையே மலைத்து போய் உட்கார்ந்துள்ளது..!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications