பலியாடான அண்ணாமலை.. பாஜக தேசிய தலைமையை அதிமுக விமர்சிக்கவே இல்லையே! கூட்டணி விலகல் அறிக்கை பாருங்க
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ள அதிமுகவின் அறிக்கையில் பாஜக மாநில தலைமையை மட்டும் குற்றம்சாட்டியுள்ள அக்கட்சி, தங்களின் கோரிக்கைகள் எதையும் ஏற்காத தேசிய தலைமை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.
அதிமுகவின் பெரும் தலைவர்களாக போற்றப்படும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த விமர்சனங்கள் இரு கட்சிகளின் கூட்டணியில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியது. பாஜக கூட்டணியை விட்டே வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் அதிமுக தலைமையகத்தில் பாஜக கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில், பாஜக மாநிலத் தலைமை என்றே 2 முறை அதிமுக குறிப்பிட்டு உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் அவரது செயல்பாடுகளை சுட்டிக்காட்டி கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்து இருக்கிறது அதிமுக. அண்ணாமலை மீது நடவடிக்கை வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஏற்காத பாஜக தேசிய தலைமை எந்த குற்றச்சாட்டையோ விமர்சனத்தையோ அதிமுக வைக்காததும் விவாதப் பொருளாகி உள்ளது.
-
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications