சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கதிகலங்கிய ஈபிஎஸ் தரப்பு.. காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. பகீர் கிளப்பிய ஓபிஎஸ் அணி.. முழுவிபரம்

Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கதிகலங்கி உள்ளது என ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் கூறினார்.

அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளது. ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றம் சென்றார். நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.

திருப்பிப்போட்ட ஓபிஎஸ் டீம்.. 'வீடியோ’.. ஆவணங்களை எடுத்துச் சென்றது ஏன்?- ஜேசிடி பிரபாகர் பதில் மனு!திருப்பிப்போட்ட ஓபிஎஸ் டீம்.. 'வீடியோ’.. ஆவணங்களை எடுத்துச் சென்றது ஏன்?- ஜேசிடி பிரபாகர் பதில் மனு!

உச்சநீதிமன்றத்தில் தடை

உச்சநீதிமன்றத்தில் தடை

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தது. இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்து பொதுக்குழு செல்லும் என உத்தரவிட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தனர். இதுதொடர்பாக பதிலளிக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஜேசிடி பிரபாகர் பேட்டி

ஜேசிடி பிரபாகர் பேட்டி

இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்தது. நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. மாறாக கட்சி சார்ந்து வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த நாங்களே விரும்பவில்லை என கூறினோம். இதற்கு நீதிமன்றம் ஒப்புக்கொண்டது என்றனர். இந்நிலையில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஜேசிடி பிரபாகர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

 கதிகலங்கிய ஈபிஎஸ்

கதிகலங்கிய ஈபிஎஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கதிகலங்கி உள்ளது கண்ணுக்கு தெரிகிறது. முதல்வராக ஈபிஎஸ் இருந்தபோத ஓபிஎஸ் முந்தைய அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதாக தீர்மானம் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அப்போது டிடிவி தினகரன் கொண்டு வந்த தீர்மானத்தை ஓபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் முறியடித்தார். எனக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம். நான் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன் என்றே ஓ பன்னீர் செல்வம் கூறினா். ஆனால் துணை முதல்வராக பொறுப்பை கொடுத்தனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நிதி சார்ந்த விவகாரங்களில் டெல்லி சென்றால் ஓபிஎஸ்ஸை தன்னுடன் அழைத்து செல்வார்.

காலை தொட்டு வணங்கியவர்கள்

காலை தொட்டு வணங்கியவர்கள்

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு ஒருமுறை கூட ஓ பன்னீர் செல்வத்தை தன்னுடன் அழைத்து செல்லவில்லை. அதனை ஓபிஎஸ் பெரிதாகவும் எடுத்து கொள்ளவில்லை. பிரதமரே ஒருமுறை 2 பேரும் சேர்ந்து வாருங்கள் என கூறினார். அப்போதும் கூட ஓ பன்னீர் செல்வத்தை அழைக்காமல் தானாகவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். சகிப்புத்தன்மை இருந்ததால் தான் ஓ பன்னீர் செல்வம் இதனை பொறுத்து கொண்டார். மேலும் பல சமயங்களில் கேள்வி கேட்காமல் பல இடங்களில் கையெழுத்திட்டவர் தான் ஓ பன்னீர் செல்வம். எவ்வளவு அவமானங்கள். அண்ணன் என கையை பிடித்த பலபேர், காலை தொட்டு வணங்கிய சிலபேர், சாஷ்டாங்கமாக காலில் விழுந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் என கூட சிலர் கூறினார்கள். நாங்கள் அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

நிர்வாகத்தை சாதகமாக மாற்றிய

நிர்வாகத்தை சாதகமாக மாற்றிய

அதன்பிறகு நிர்வாகத்தை சாதமாக பெற்று கொண்ட பிறகு தேதி குறித்து ஓபிஎஸ்ஸை திட்டமிட்டு வெளியேற்றியது யார்? முதலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தாலம் என்ற கோரிக்கை எழுந்தது. அதனை முதலில் நடத்த வேண்டும் என கூறினோம். இது முறைப்படி சட்டப்படி ஜனநாயகப்படி நடந்தது. விபரங்கள் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தோம். பிற தேர்தலகள் நடத்த உத்தரவு பெறப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் மாத இறுதியில் பொதுக்குழு நடத்த கோரியபோது அக்னிநட்சத்திரம் முடிந்த பிறகு பார்க்கலாம் என கூறினார்கள்.

ஓபிஎஸ் அவமதிப்பு

ஓபிஎஸ் அவமதிப்பு

அதன்பிறகு ஜூன் 9 ல் சேலத்தில் நடந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை கற்பனை எனவும், இரட்டை தலைமை தான் தொடரும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால் ஜூன் 16ம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தினார். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என கூறவேண்டும் என்பதற்காக அதனை கூட்டினார்கள். ஜூன் 23க்கு முன்பு 10 முன்னாள் அமைச்சர்கள் எங்களை சந்திக்க வந்தனர். 20 பேர் அல்லது 11 பேர் கொண்ட வழிக்காட்டி கமிட்டி அமைக்க வேண்டும். முறைப்படி பொதுக்குழு நடக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒற்றை தலைமை விவகாரம் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட உள்ளதை அறிந்தே நீதிமன்றத்தை நாடினோம். அதிகாலை 4 மணிக்கு உத்தரவை பெற்றோம். அதன்பிறகு பொதுக்குழுவில் சென்ற ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டார். அதிமுக கட்சி ஒன்றும் எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து அல்ல. இது கண்டிக்கத்தக்கது. இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டும்'' என்றார்.

English summary
O Panneer Selvam's supporter JCD Prabhakar said that Edappadi Palanichami's side is in a panic because of the Supreme Court verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X