மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும்! அந்தர்பல்டி அடித்த கே.பி.முனுசாமி! திடீர் பதுங்கல்!
அண்ணாமலையின் எச்சரிக்கைக்கு அஞ்சியதா அதிமுக?
சென்னை: மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் எனக் கூறி அந்தர்பல்டி அடித்திருக்கிறார் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி.
ஆரம்பம் முதலே பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்த கே.பி.முனுசாமி, இப்போது தனது நிலைப்பாட்டை அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்டுள்ளார்.
கே.பி.முனுசாமியின் இந்த திடீர் பதுங்கலின் பின்னணியில், ஒவ்வொரு விணைக்கும் ஒரு எதிர்விணை இருக்கும் என அண்ணாமலையின் எச்சரிக்கை காரணமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாஜக எதிர்ப்பு
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் கே.பி.முனுசாமி, பாஜகவை அவ்வப்போது தலையில் குட்டும் வகையில் பேசக்கூடியவர். கூட்டணி ஆட்சி என்ற கனவோடு எந்த தேசியக் கட்சியும் அதிமுக பக்கம் வர வேண்டாம் என 2 ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவை விமர்சித்தவர். அதுமட்டுல்ல கூட்டணி என்றால் அது அதிமுக தலைமையிலான கூட்டணியாக தான் இருக்குமே தவிர தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியாக இருக்காது என பாஜகவை வறுத்தெடுத்தவர் முனுசாமி.

கே.பி.முனுசாமி அந்தர்பல்டி
அதுமட்டுமல்ல அண்மையில் அதிமுக பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பின் போது பாஜகவுக்கு எதிராக குரலை உயர்த்தியவர், நேற்று அப்படியே தனது டோனை மாற்றி அந்தர் பல்டி அடித்திருக்கிறார். அதாவது மீண்டும் மோடி தான் பிரதமராக வர வேண்டும் என தாங்கள் ஆசைப்படுவதாகவும் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை வளரச் செய்வதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார் எனவும் திடீர் புகழாரம் சூடினார்.

இருக்கிற இடம்
தங்களை இருக்கின்ற இடத்திலேயே இருக்க வைப்பதற்கு சிலர் முயற்சி செய்து வருகிறார்கள் என்று அவர் கூறியிருப்பது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை மனதில் வைத்து தான். இதனால் தான் இனியும் பாஜகவுடன் முரண்டு பிடித்து சண்டை போட்டால் அது அதிமுகவின் உட்கட்சி அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கே.பி.முனுசாமி தனது நிலைப்பாட்டிலிருந்து இப்படி பின்வாங்கியதற்கான காரணம் கூறப்படுகிறது.

தொண்டர்கள் குழப்பம்
அதிமுக தலைவர்கள் திடீரென பாஜகவை எதிர்ப்பதும் பிறகு அப்படியே பின் வாங்குவதும் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி










Click it and Unblock the Notifications