"சஸ்பென்ஸ்".. பொதுக்குழுவுக்கு தடையா.. ஓபிஎஸ் தொடர்ந்த கேஸ்.. ஹைகோர்ட் முக்கிய உத்தரவு.. "இங்கேயுமா"
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது
சென்னை: அதிமுகவில் வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி, ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. எடப்பாடி பழனிசாமி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23ம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
அதுவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.. திடீரென சம்பந்தமேயில்லாமல், அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.. இது பெரும்பாலும் எடப்பாடி தரப்பில் இருந்தே ஒலித்தது.. இதை ஓபிஎஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அப்போது முதலே ஓபிஎஸ் - எடப்பாடி தரப்பினரின் மோதல்கள் அதிகரித்து விட்டன.. இரு தரப்பிலும் கண்டனங்களும், குற்றச்சாட்டுகளும், புகார்களும், மாறி மாறி தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
கட்சிக்குள் மட்டுமே நடந்து கொண்டிருந்த விவகாரம், திடீரென சட்டரீதியாக திசை திரும்பிவிட்டது.. இதற்கு காரணம் ஓபிஎஸ்தான்.. எம்எல்ஏக்கள், மா.செ.க்கள் ஆதரவை அளவுக்கு அதிகமாக கையில் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, எந்நேரமும் கட்சியை கைப்பற்றலாம் என்ற கலக்கம் ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.. அதனால்தான், அவர் கோர்ட்டுக்கு ஓடினார்.. மற்றொரு பக்கம் தேர்தல் ஆணையத்தையும் நாடினார்.. எப்படியும் இரட்டை இலையை முடக்கிவிடலாம் என்ற ஒரே நம்பிக்கையில் காத்து கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.

எடப்பாடி பிளான் என்ன?
இதற்காக, பலவித சட்ட நடவடிக்கைகளை கையில் எடுத்தார் ஓபிஎஸ்.. அதன்படி, அதிமுக பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், நள்ளிரவிலேயே உத்தரவு பிறப்பித்தது... அதன்படி, புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்பட கூடாது என்றும், அதிமுக பொதுகுழுவிற்கு உறுப்பினர் அடையாள அட்டை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்தது.

ஹைகோர்ட்
இதையடுத்து, நீதிமன்ற கட்டுப்பாடுகளுடன் கடந்த ஜுன் 23ம் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் மூலம் அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்றும் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பில் கூட்டத்தின் பாதியிலேயே புறப்பட்டார்.

கன்ட்ரோல்
இந்நிலையில்தான், இந்தக் கூட்டத்தில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே விதித்த கட்டுப்பாடுகள் செல்லாது எனவும், பொதுக்குழுவுக்கு தடைக் கோரும் வழக்கை தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் தரப்பினர் நேற்று மனு அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.. ஒருவேளை பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுவிடுமா? என்ற எதிர்பார்ப்பும் எகிறி கொண்டே வந்தது.. இந்நிலையில், இன்று இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது ஹைகோர்ட்..

விசாரணை
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுக தெரிவித்துள்ளது என்றார்... அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

கேள்வி
அதற்கு ஓபிஎஸ் வழக்கறிஞர், "பொதுக்குழுவுக்கு தடை தான் கோரப்பட்டுள்ளது, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட் விளக்கமளித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்கிறோம். வழக்கை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது என்று நீதிபதி இதற்கு தெரிவித்தார்..
Recommended Video

அவகாசம்
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கையை வைத்ததுடன், கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது" என்றார்.. இதையடுத்து, சுப்ரீம்கோர்ட் உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளை பிற்பகல் 2:15க்கு தள்ளிவைத்தார்.. பொதுக்குழுவுக்கான ரிசல்ட் இன்றே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், பொதுக்குழு சஸ்பென்ஸ் நீள்கிறது..!
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications