ஆட்டோவில் பயணம்; சாலையோரக் கடையில் டீ; கேசுவலாக உலா வரும் அதிமுக அவைத்தலைவர்!
சென்னை: அதிமுக செயற்குழு முடிந்த பிறகு அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆட்டோவில் வீட்டுக்கு சென்ற நிகழ்வு பேசு பொருளாக மாறியுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து ரயில் மூலம் மட்டுமே சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழ் மகன் உசேன், ஆட்டோவில் தான் அங்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வாராம்.
சொந்தமாக கார் கூட இல்லாத ஒருவர் கட்சியின் உயர்ந்த பதவியில் அமர்ந்ததன் மூலம் எளியோரும் ஏற்றம் பெறக் கூடிய ஒரே கட்சி அதிமுக என அக்கட்சியின் ஐ.டி.விங் நிர்வாகிகள் சமூகவலைதளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக
அதிமுகவை பொறுத்தவரை சாதாரண குப்பனும் சுப்பனும் கூட ஏற்றம் பெற முடியும் என்பது அக்கட்சியின் எழுதப்படாத விதி. ஜெயலலிதா காலத்தில் நடைபெற்ற ஏராளமான நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக கூறமுடியும். ஓட்டுவீட்டில் வசித்தவர்கள் கூட அதிமுகவில் அமைச்சர்களாக ஆகியிருக்கிறார்கள். இதனால் தான் இத்தனை பஞ்சாயத்துகளுக்கு மத்தியிலும் அதிமுக தொடர்ந்து தனது வலிமையை தக்க வைத்து வருகிறது.

ஜாம்பவான்கள்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என புலம்பல் சத்தம் அதிகரித்த வந்த நிலையில், தமிழ்மகன் உசேனை அவைத்தலைவர் பதவியில் அமர வைத்து அதிமுக என்றால் இது தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும். பொன்னையன், செங்கோட்டையன், தம்பிதுரை, செம்மலை என பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லா அவைத்தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் வழக்கம் போல் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டது அதிமுக தலைமை.

ஆட்டோ பயணம்
இதனிடையே அதிமுக செயற்குழுவில் பங்கேற்பதற்காக ஆட்டோ பிடித்து அதிமுக தலைமைக்கழகம் வந்த தமிழ் மகன் உசேன், கூட்டத்துக்கு பிறகு அவைத்தலைவராகவும் ஆட்டோவில் தான் வீடு திரும்பியுள்ளார். சொந்தமாக அவரிடம் கார் இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு முன் அவைத்தலைவராக இருந்த மதுசூதணன் விலை உயர்ந்த கார் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இன்னோவா கார் தமிழ் மகன் உசேனுக்கு கட்சித் தலைமையால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேசுவல்
சென்னையில் மகன் வீடு இருந்தாலும் அவர்களுக்கு பாரம் அளிக்கக் கூடாது என எண்ணி விடுதியில் தங்குவதும் தமிழ் மகன் உசேனுக்கு வழக்கமாகும். தமிழ் மகன் உசேனை பொறுத்தவரை எப்போதும் கேசுவலாக இருக்கக்கூடியவர் என்கிறார்கள் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை தேநீர்கடைக்காரர்கள்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்!












Click it and Unblock the Notifications