அரவக்குறிச்சிக்காக அலை மோதும் அதிமுக பிரபலங்கள்.. நிர்மலா பெரியசாமிக்கு சான்ஸ்?
Recommended Video
சென்னை: அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து பரபரப்பு நிலவுகிறது. இதுதொடர்பாக 2 அமைச்சர்களுக்கு இடையே கடும் பனிப் போர் நிலவுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மே 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பலமான வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்துள்ளது அதிமுக.

அந்த வகையில் அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியை வீழ்த்த பவர்புல் கேண்டிடேட்டை நிறுத்த முடிவு செய்துள்ளனர் ஒ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும். அதற்கான அசைன்மெண்ட் உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில், அரவக்குறிச்சியில் தனக்கு வேண்டப்பட்ட நபரை நிறுத்த விரும்புகிறாராம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சர். இதனை விரும்பாத லோக்கல் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தான் சொல்லும் நபரைத் தான் வேட்பாளராக அரவக்குறிச்சியில் களம் இறக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தன்னிடம் பைசா காசு எதிர்பார்க்கக் கூடாது எனவும் கறார்காட்டுகிறாராம்.
அமைச்சர்கள் இருவரும் தங்களுக்கு தோதான நபர்களை களமிறக்க காய் நகர்த்துவதால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தறபோது அரவக்குறிச்சியில் சீட் கேட்டு நிர்மலா பெரியசாமி விண்ணப்பித்துள்ளாராம். அவரது பூர்வீகம் கரூர் மாவட்டம் என்பதால் இந்த விருப்ப மனுவைப் போட்டுள்ளாராம்.
அரவக்குறிச்சியில் எந்த அமைச்சருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது, நிர்மலாவுக்கு சீட் கிடைக்குமா என்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சூலூர் தொகுதியில் செம. வேலுச்சாமியையும், திருப்பரங்குன்றத்தில் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்தையும் வேட்பாளர்களைக் களம் இறக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் தற்போது பைனான்சியர் அன்புச் செழியன் வேறு சீட் கேட்டுள்ளதால் அதிமுகவுக்கு தர்மசங்கடமாகியுள்ளதாம்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications