அதிமுக நிர்வாகி செய்த அசிங்கம்.. சென்னையில் சக கட்சி நிர்வாகி வீட்டிற்குள் சிறுநீர் கழித்ததாக புகார்
சென்னை: உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக நிர்வாகியின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவின் முன்பாக அதிமுக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் பி.வி கோவில் தெருவில் வசிக்கும் பரமேஸ்வரன் அதிமுகவின் கட்சி நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் அதிமுகவை ராயபுரம் எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி தலைவர் அறிவழகன் என்பவருக்கும் ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அறிவழகன், பரமேஸ்வரன் வீட்டிற்கு மிரட்டுவதற்காக சென்றுள்ளார். ஆனால், அப்போது வீட்டில் பரமேஸ்வரன் வெளியில் சென்றிருந்ததால் அவரது மனைவி, அவரது தந்தை மற்றும் 6 வயது குழந்தை மட்டுமே இருந்துள்ளனர். அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய அறிவழகன், வீட்டிற்கு உள்ளே அனைவர் முன்பாகவும் முன்னதாக சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் பரமேஸ்வரன் மனைவி பிரியாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை அடுத்து பிரியா சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை அறிவழகன் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் ராயபுரம் காவல் நிலைய அதிகாரிகள் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

இதுகுறித்து பிரியா தெரிவித்துள்ளதாவது, "கட்சி தகராறை வெளியில் வைத்துக்கொள்ளாமல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது கணவர் பரமேஸ்வரன் வீட்டிற்குள் இல்லாதபோது அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி வீட்டுக்கு உள்ளேயே அறிவழகன் சிறுநீர் கழித்து சென்றது மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும், காவல்துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications