ஆரம்பித்த ரிசர்வேஷன்.. 90 நாட்களுக்கு முன்பே அரசு விரைவு பஸ்களில் துவங்கிய முன்பதிவு.. மக்கள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தற்போது 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதையொட்டி, பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, தினமும், 1,080க்கும் மேற்பட்ட டீலக்ஸ் மற்றும் ஏசி வசதியுள்ள விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்களில், தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகிறார்கள்.. பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு, முன்பதிவு செய்யலாம் என்பது நடைமுறையாக இருந்தது.. இது தற்போது 90 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கும் வந்துள்ளது..

reservation bus ticket

முன்பதிவு: இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை பற்றி, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, "வழக்கமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின்போது, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.. அந்தவகையில், வரும் ஜனவரி 14ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.. இதையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர், சொந்த ஊருக்கு செல்லக்கூடும்.. அரசு விரைவு பஸ்களில் 2 மாதங்களுக்கு முன்புதான், முன்பதிவு செய்ய முடியும்.

கூடுதல் பஸ்கள்: ஆனால், இப்போது 90 நாட்களுக்கு முன்னரே, முன்பதிவு செய்யும் வசதி அமலாகியுள்ளது.. இதனால், பயணியர் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க முடியும். கூடுதல் பஸ்களை இயக்க, நிர்வாகத்துக்கும் வசதியாக இருக்கும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர், ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

வரும் ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கும் தேதி வெளியிடப்படும். நெரிசலை தவிர்க்க, அரசு போக்குவரத்து கழகwww.tnstc.in இணையதளம் அல்லது, டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளனர்.

பயணிகள் மகிழ்ச்சி: கடந்த பொங்கல் பண்டிகையின்போது, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் வாயிலாக, 6.54 லட்சம் பேர் பயணம் செய்திருந்த நிலையில், தற்போது போக்குவரத்து துறை அமல்படுத்தியிருக்கும் இந்த புதிய ரிசர்வேஷன் முறை, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+