22 ஆண்டுகளாக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கினோம்..நீதிக்கு கிடைத்த வெற்றி இது..மா.சுப்பிரமணியன்!
சென்னை: 2002ஆம் ஆண்டு அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டது நீதிக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளாக நீதிக்காக நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கியதாகவும் கூறியுள்ளார்.
2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக சார்பாக கண்ணப்பர் திடல் மீன் அங்காடி தொடர்பான டெண்டர் பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், அது ஒரு கட்டத்தில் நேரடி மோதலாக மாறியது. அப்போது அங்கிருந்த மைக், நாற்காலிகள் உள்ளிட்டவை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் அதிமுகவின் பரிமளா, ஜீவரத்தினம், குமாரி உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் மாமன்ற செயலர் ரீட்டா சார்பாக திமுக கவுன்சிலர்களான மா.சுப்பிரமணியன், சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், மூர்த்தி, வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பின் அவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த சூழலில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், அதிமுக கவுன்சிலர்களை தாக்கிய வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
22 ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கில் 70க்கும் அதிகமான சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இதில் சாட்சியளித்தவர்களில் சிலர் பிறழ்சாட்சிகளான நிலையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது நீதிக்கு கிடைத்த வெற்றியாகும். நீதிக்காக 22 ஆண்டு காலமாக நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கினோம் என்று தெரிவித்துள்ளார்.
-
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications