25 ஆண்டு கால போராட்டம்...தமிழக சட்டசபையில் இடம்பிடித்த பாஜக
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பாஜக.,விற்கு எம்எல்ஏ.,க்கள் கிடைத்துள்ளனர். இது தமிழக அரசியலில் பாஜக.,விற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
Recommended Video

தமிழக அரசியல் வரலாற்றில் காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகள் தான் இதுவரை ஆட்சி செய்துள்ளன. தேசிய அளவில் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்த போதிலும் தமிழகத்தில் காலூன்ற பாஜக கடுமையாக போராடி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக.,விற்கு 2 முதல் 3 சதவீதம் ஓட்டு மட்டுமே உள்ளது.

இதுவரை நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல்களில் 1996 ல் பாஜக சார்பில் வேலாயுதம், கன்னியாக்குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்று, எம்எல்ஏ ஆனார். அந்த தேர்தலில் அவர் 1.8 சதவீதம் ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். அதன் பிறகு பாஜக.,வில் இருந்து விலகி, திமுக.,வில் இணைந்தார். 2001 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேலாயுதம் 3.2 சதவீதம் ஓட்டுக்களை பெற்றார்.
அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தமிழகத்தில் பாஜக தனித்தே போட்டியிட்டது. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பாஜக.,வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது மத்திய அரசு ஆதரவு தேவை என்பதால் இந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சேர்க்கப்பட்டது.
இதில் பாஜக.,விற்கு 20 தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கியது. ஆனால் பாஜக.,வின் 3 வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளனர். இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்தி, திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பாஜக தமிழக சட்டசபையில் இடம்பிடித்தள்ளது.
-
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications