அண்ணாவைத் தொடர்ந்து பெரியார் திடல்.. சீமான் எதிர்ப்பு திசையில் நடிகர் விஜய்! திமுக பாதையில் தவெக?
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தம்பி தம்பி என என்னதான் பாசமாக அழைத்துக் கொண்டே இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் பாதை வேறானது என்பதாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகிய திராவிட மூலவர்களின் பிறந்த நாட்களை அடுத்தடுத்து சீமான் புறக்கணிக்க, நடிகர் விஜய்யோ திராவிட கட்சிகளின் பாணியில் கொண்டாடுகிறார்.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்ததால் சீமான், நடிகர் விஜய் மீது பாசமழை பொழிந்து கொண்டே இருந்தார். விஜய் கட்சியுடன் கூட்டணி, விஜய் கட்சி மாநாட்டில் பங்கேற்பு என்றெல்லாம் விஜய் தம்முடன் கை கோர்த்துவிடுவார் என்ற நம்பிக்கையில் சீமான் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் விஜய் தரப்பில் இருந்து சீமானை சீண்டுவதாக கூட தெரியவில்லை போல.

ஜகா வாங்கும் சீமான்: அதனால் திடீரென விஜய் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கவில்லை, இன்னொரு கட்சி மாநாட்டில் எப்படி பங்கேற்பது என பல்டி அடித்தார் சீமான். அதேபோல விஜய் கட்சியுடன் கூட்டணி என துண்டை விரித்துப் பார்த்தும் எதுவும் நடக்காததால் நானே 60 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டேன்.. தம்பி விஜய் வரட்டும் அவரிடம் கேளுங்கள் என ஜகா வாங்கி வருகிறார் சீமான்.
பெரியார் திடலில் நடிகர் விஜய்: சமூக வலைதளத்தில் கட்சியை அறிவித்திருந்த விஜய், அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் பாதை எப்படியானதாக இருக்கப் போகிறது என்பதை புதிராகவே வைத்திருக்கிறார். இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம் என சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமது சமூக வலைதளப் பக்கத்தில் செய்தியை பகிர்ந்துள்ளார். அத்துடன் இல்லாமல் தந்தை பெரியார் நினைவிடம் அமைந்துள்ள் சென்னை வேப்பேரி பெரியர் திடலுக்கும் சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார் நடிகர் விஜய் என்பதுதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. குறிப்பாக பெரியாரை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களான சீமான் மற்றும் பாஜக தரப்புதான் ரொம்பவே காண்டாகி போயிருக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை.

சீமான் திசைக்கு கும்பிடு: தமிழ்நாட்டில் 'திராவிட' அரசியல்தான் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. திமுக, அதிமுக எனும் இரு பெரும் திராவிடக் கட்சிகளைத் தாண்டி இன்னொரு கட்சியின் ஆட்சி என்பது கனவிலும் நடக்காத ஒன்றாக இருந்து வருகிறது. என்னதான் சீமான் 2026-ல் நானே முதல்வர்; நானே இந்தியாவின் அதிபர் என பேசினாலும் அது ரசிக்கத்தானே தவிர நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதை புரிந்து கொண்டதாலோ என்னவே அனைவரையும் போலவே "திராவிட" மூலவர்களான பெரியாரையும் அண்ணாவையும் போற்றி வணங்கி, சீமான் பயணிக்கும் திசைக்கு பெரும் கும்பிடு போட்டுக் கொண்டே டேக் டைவர்சனாகி திமுகவின் பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். அப்ப நாம் தமிழர் சீமான், பாஜக இனிதான் விஜய்க்கு எதிரான ஆட்டங்களை ஆடுவார்களோ?
-
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள்












Click it and Unblock the Notifications