எடப்பாடியை சூழ்ந்த பெரிய பிரச்சனை.. இது அமில சோதனை அண்ணே.. எச்சரித்த சீனியர்.. நடந்தது என்ன?
சென்னை: பாஜக கூட்டணியை தைரியமாக முறித்தது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம், எடப்பாடியை வேறு பிரச்சனை சூழ்ந்து உள்ளது. அவருக்கு இது அமில சோதனை., என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டெல்லி சென்றார். இந்த டெல்லி பயணத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் நடந்து உள்ளன. இந்த சந்திப்பு தொடர்பாகவும், பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தது தொடர்பாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அதிமுக பற்றி அண்ணாமலை பேச கூடாது. அண்ணாமலை எதுவும் அதிகம் பேச கூடாது. உங்கள் மீது கோபம் உள்ளது. ஆனால் ஆக்சன் இப்போது இல்லை. உடனே தூக்கினால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைவார்கள் . அதனால் ஆக்சன் எடுக்க விருப்பம் இல்லை. இதனால்தான் அதிமுக பற்றிய கேள்விக்கு அண்ணாமலை பதில் அளிக்கவில்லை. அண்ணா பற்றிய கேள்விக்கும் அண்ணாமலை பதில் அளிக்கவில்லை. கடந்த முறை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறிய அண்ணாமலை இப்போது அப்படி கூற முடியவில்லை.
என்ன சொன்னார்?: பாஜக அதிமுகவிற்கான கதவை அப்படியே மூட முடியாது. அதனால் அதிமுகவை பகைக்க விரும்பவில்லை. அதேபோல் பாஜக சீனியர்கள் தேர்தலில் நிற்க விரும்புகிறார்கள். தாங்கள் தேர்தலில் நின்றாள் வெல்ல வேண்டும். அதற்கு அதிமுக தயவு தேவை. ஆனால் அண்ணாமலை அதிமுகவை எதிர்க்கிறார். அதோடு பாஜகவுடன் கூட்டணி வைக்க சிறிய சிறிய காட்சிகளை கொண்டு வர பார்க்கிறார். அவர்களுடன் சேர்ந்தால் கூட்டணியில் வெற்றிபெற முடியாது. அதனால் சீனியர்கள் கோபத்தில் உள்ளனர்.

சீனியர்கள் தேர்தலில் வெற்றிபெற அதிமுக தேவை என்று நினைக்கிறார்கள். எத்தனை காலம் எச். ராஜா தோல்வி அடைவர். அதிமுகவும் இன்னொரு பக்கம் அப்செட்டில் இருக்கிறது. பாஜகவுடன் மோதலை அதிமுக விரும்பவில்லை. ஏன் பாஜகவை எதிர்க்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். எடப்பாடியை வேறு பிரச்சனை சூழ்ந்து உள்ளது. அவருக்கு இது அமில சோதனை. ஏனென்றால் அவர் கட்சியை கட்டுப்பாட்டில் எடுத்து சந்திக்கும் முதல் தேர்தல். இதில் அவர் வெல்ல வேண்டும். ஆனால் பாஜக கூட்டணியை அவர் முறித்துவிட்டார்.
அமில சோதனை: இதனால் வாக்குகள் உடையும். இதை சீனியர்கள் சொல்லி இருக்கிறார்கள். முதல் தேர்தலிலேயே உங்களுக்கு சிக்கல். ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என்று சீனியர்கள் கேட்டுள்ளனர். அதோடு ஓ பன்னீர்செல்வம் பக்கம் எடப்பாடி ஆட்கள் சென்றால் என்ன ஆகும்? இதுவும் எடப்பாடிக்கு சந்தேகமாக உள்ளது. இந்த அதிமுக பாஜக பிளவு சரியாக அமையவில்லை என்பதே இப்போது நடக்கும் பல்வேறு குழப்பங்களுக்கு காரணம். அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசியதுதான் கூட்டணி பிரிவிற்கு காரணம் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால்.. அதன்பின்பும் கூட அமித் ஷாவை சென்று எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் . அதன்பின் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் சென்று நட்டாவை சந்தித்தனர். அதனால் அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசியதுதான் கூட்டணி முறிவிற்கு காரணம் என்று கூற முடியும். ஏனென்றால் இதற்காக அவர்கள் கூட்டணியை முறிக்க வாய்ப்பு இல்லை. அதிமுக பாஜக பிளவு சரியாக அமையவில்லை என்பதே இப்போது நடக்கும் பல்வேறு குழப்பங்களுக்கு காரணம்.
நேற்று கூட எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் விருப்பமாக கூட்டணி முறிவிற்கு காரணம் என்கிறார். அமித் ஷா 20 தொகுதி கேட்டார், கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சேர்க்க சொன்னார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதுதான் கூட்டணி முறிவிற்கு காரணம் கூறப்பட்டது. அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்ற குழப்பம்தான் இப்போது உள்ளது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications