Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்கிரம்.. Bulli Bai ஆப்பை தொடர்ந்து Sulli Deals செயலியை நடத்தியவரும் கைது.. வளைத்து பிடித்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தடை செய்யப்பட்ட 'Sulli Deals' என்ற செயலியை நடத்திய நபர் மத்திய பிரதேசத்தில் டெல்லி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய பெண்களை ஏலம் விடும் 'Sulli Deals' என்ற செயலியும், Bulli Bai என்ற செயலியும் கடந்த சில நாட்களாக நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. Sulli Deals மற்றும் Bulli Bai என்பது இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை ஏலம் விட்டு கமெண்ட் செய்யும் செயலிகள் ஆகும்.

இதில் பல இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் ஏலம் விட்டு விற்பனை செய்து உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்தான் Sulli Deals என்ற செயலி முடக்கப்பட்ட நிலையில் தற்போது Bulli Bai செயலி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 Bulli Bai செயலி

Bulli Bai செயலி

ஏற்கனவே Bulli Bai செயலியை நடத்தி வந்த அதன் மாஸ்டர் மைண்ட் நீரஜ் பிஸ்னோய் என்ற அசாம் இளைஞர் உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை போலீசார் ஒரு பெண் உட்பட மூன்று பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த செயலிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், டெல்லி போலீஸ் இதில் எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த நிலையில்தான் Bulli Bai செயலியின் நிர்வாகி நீரஜ் பிஸ்னோய் டெல்லி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

 நீரஜ் பிஸ்னோய்

நீரஜ் பிஸ்னோய்

நீரஜ் பிஸ்னோய் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பழைய 'Sulli Deals' செயலியை நடத்திய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த 'Sulli Deals' கடந்த 7 மாதங்களுக்கு முன் செயல்பட்டு வந்தது. அதன்பின் போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகார் காரணமாக முடக்கப்பட்டது. இதில் எப்ஐஆர் பதியப்பட்டாலும் அப்போது கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

Sulli Deals செயலி

Sulli Deals செயலி

இந்த செயலியும் GitHub தளத்தில்தான் இயங்கி வந்தது. இந்த நிலையில்தான் இத்தனை மாதங்கள் கழித்து 'Sulli Deals' செயலியை நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீரஜ் பிஸ்னோய் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பெயர் அம்கரேஷ்வர் தாக்கூர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 யார் கைது?

யார் கைது?

இவரின் கணினியில் இந்த செயலி நடத்தப்பட்டு வந்ததற்கான ஆதாரம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தூரில் இருக்கும் ஐபிஎஸ் அகாடமியில் அம்கரேஷ்வர் பிசிஏ படித்து முடித்துள்ளார். 26 வயதாகும் அம்கரேஷ்வர் 'Sulli Deals' செயலிக்கான அடிப்படை கோடிங்கை எழுதியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அம்கரேஷ்வர் கடந்த ஜனவரி 2020ல் 'Trade Mahasabha' என்ற இந்து அமைப்பில் சேர்ந்து உள்ளார். அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் இவர் இஸ்லாமியர்களை எப்படி அவமதிப்பது என்பது குறித்து விவாதம் செய்துள்ளார்.

இஸ்லாமிய பெண்கள் குறி

இஸ்லாமிய பெண்கள் குறி

அதன்பின் 'Sulli Deals' செயலியை உருவாக்கும் முடிவை எடுத்துள்ளனர். இந்த நிலையில் அந்த 'Trade Mahasabha அமைப்பில் இருந்த மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் இரண்டு ஆப்கள் குறித்த செய்தி வெளியே வந்ததும் அம்கரேஷ்வர் தனது ட்விட்டர் பக்கத்தை டெலிட் செய்துவிட்டு வீட்டிலேயே முடங்கிவிட்டார். இவரை பற்றி நீரஜ் பிஸ்னோய் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அம்கரேஷ்வர் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+